பயிற்சிப் பட்டறை

ஒளிப்பதிவு & புகைப்படக் கலை – பயிற்சிப்பட்டறை 06-11-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. நன்கொடை: 100 ரூபாய் மட்டும். பயிற்சியளிப்பவர்: ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர் நண்பர்களே, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தொகுப்பு குறித்து படத்தொகுப்பாளர் லெனின் சென்ற மாதம் ஒரு குறும் பயிற்சிப்பட்டறை நடத்திக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஒளிப்பதிவாளரும் தமிழ்நாட்டின் மிக சிறந்த புகைப்படக் கலைஞருமான வைட் ஆங்கில் ரவிசங்கர் எதிர்வரும் ஞாயிறு … Read more

எழுத்தாளர் என்ற அடைமொழி

ஜெயமோகனின் தீவிர விசிறி என்றாலும் அமிர்தம் சூர்யாவை எனக்குப் பல காரணங்களால் பிடிக்கும்.  அடிக்கடி சம்ஸ்கிருத காவியங்களிலிருந்தும் வேதத்திலிருந்தும் எடுத்துக்காட்டுகள் சொல்வார்.  மேடையில் பிரமாதமாகப் பேசுவார்.  பழகுவதற்கு இனிமையானவர்.  நல்ல கவிஞர்.  ஆனால் கொஞ்சம் வெகுளி என்பதால் மேடையில் எப்போதாவது ஏடாகூடமாகப் பேசி வைத்து விடுவார்.  (பிரபு காளிதாஸ் கூட்டம்)  நானும் அப்படித்தானே என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  அவருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அடியேனும் கலந்து கொள்கிறேன்.  அது சம்பந்தமாக என்னைத் தனிப்பட்ட … Read more

எடிட்டிங்

தமிழின் சமகால இலக்கியத்தில் எந்தப் பிரதியுமே செப்பனிடப்படுவதில்லை.  எடிட் செய்யப்படுவதில்லை.  எடிட்டர் என்று ஒரு நபரே இங்கே இல்லை.  எல்லா நாவல்களும் எடிட் செய்யப் படாமலேயே வந்து கொண்டிருக்கின்றன.  மேலும், எடிட் செய்வதைத் தமிழ் எழுத்தாளர்களும் ஏதோ சென்ஸார் செய்வது போல் நினைப்பதால் அது ஒரு தொடப்படாத மர்மப் பிரதேசமாகவே இருக்கிறது.  ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொரு நாவலும் எடிட் செய்யப்பட வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.  ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம்.  … Read more

தீபாவளி

இப்போது நான் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன்.  எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படியெல்லாம் குறிப்புகள் எழுதவே கூடாது.  அத்தனை வேலை குவிந்து கிடக்கிறது.  இருந்தாலும் இந்த விஷயம் மனதை நெருடிக் கொண்டிருந்ததால் எழுதத் துணிந்தேன். தீபாவளிக் கொண்டாட்டம் எனக்குப் பிடிக்காது.  காரணம், மற்ற ஜீவராசிகள் வெடிச் சத்தத்தால் படும் தாங்கொணாத் துன்பம்.  நேற்று மாலையிலிருந்தே காகங்கள் பதற்றத்திலும் பீதியிலும் கதறிக் கொண்டிருக்கின்றன.  வீட்டைச் சுற்றியிருக்கும் நானாவிதமான மரங்களிலும் நூற்றுக் கணக்கான காகங்கள் குடியிருக்கின்றன.  அவற்றின் இடைவிடாத பயக் … Read more

பின் லாடனிலிருந்து கிறிஸ்து வரை…

தலைப்பை இன்னும் லயத்துடன், தீவிரவாதியிலிருந்து தீர்க்கதரிசி வரை என்றும் மாற்றி வாசிக்கலாம்.  என்ன விஷயம்?  Tag centre சம்பவம் பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில் இப்படி எழுதியிருக்கிறார்: ”சாருவின் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நேற்று டாக் செண்டரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த பதிவைப் படித்தேன். குறிப்பிட்ட நபர்களுக்கே டிபன் காஃபி ஏற்பாடு செய்யபட்டிருந்ததால் அழைப்பிதழில் இல்லாதவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்று சாருவின் பதிவின் மூலம் அறிகிறேன். உயிர்மையின் சார்பில் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சில நேரங்களில் சிற்றுண்டி ஏற்பாடு … Read more