எடிட்டிங்

தமிழின் சமகால இலக்கியத்தில் எந்தப் பிரதியுமே செப்பனிடப்படுவதில்லை.  எடிட் செய்யப்படுவதில்லை.  எடிட்டர் என்று ஒரு நபரே இங்கே இல்லை.  எல்லா நாவல்களும் எடிட் செய்யப் படாமலேயே வந்து கொண்டிருக்கின்றன.  மேலும், எடிட் செய்வதைத் தமிழ் எழுத்தாளர்களும் ஏதோ சென்ஸார் செய்வது போல் நினைப்பதால் அது ஒரு தொடப்படாத மர்மப் பிரதேசமாகவே இருக்கிறது.  ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொரு நாவலும் எடிட் செய்யப்பட வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.  ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம்.  … Read more