குற்றமே தண்டனை

எம். மணிகண்டனின் ’காக்கா முட்டை’ வித்தியாசமான முயற்சி என்பதால் சற்று ஆர்வத்துடனேயே ‘குற்றமே தண்டனை’க்குச் சென்றேன்.  நிச்சயமாக இதுவும் மற்ற தமிழ்ப் படங்களிலிருந்து விலகிச் செல்லும் வித்தியாசமான முயற்சிதான்.  அதில் சந்தேகமில்லை.  படம் சுவாரசியமாகவே இருந்தது.  ஒரு இடத்திலும் அலுப்புத் தட்டவில்லை.  ஆனாலும் இந்தப் படம் தரும் ஒட்டு மொத்த அனுபவம் என்னவென்று பார்த்தால், ஏதோ ஒன்று குறைகிறது.  இது, இந்தப் படத்தைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம்.  ஆனால் யாருக்கும் என்ன குறைகிறது என்று தெரியவில்லை.  ஏதோ … Read more

இரண்டு கொடுங்கனாக்கள்…

இரண்டிலுமே மனுஷ்ய புத்திரன் வருகிறார்.  கொடுங்கனா என்றால் மனுஷ் இல்லாமலா? கொடுங்கனா ஒன்று: முதல் கனவு வந்த போது தேர்தல் சமயம்.  மனுஷ்ய புத்திரன் போலீஸ் மந்திரியாகி ஏதோ பொய்க் கேசில் என்னை உள்ளே தள்ளி விடுவதைப் போல.  கனவுதானே, என்ன லாஜிக் இருக்கப் போகிறது என்று விட்டு விட முடியவில்லை.  ஏனென்றால், படு காட்டமாக என்னைத் தாக்கி முகநூலில் எழுதிக் கொண்டிருந்தார்.  அதனால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம்.  ஆனாலும் என் உயிர் உள்ளளவும் மனுஷ்ய புத்திரனை … Read more

’மேலும் ஒருவர்’ குறித்து ஒரு சிறிய விளக்கம்…

மேலும் ஒருவர் பற்றி முகநூலில் ஜெகா பின்வரும் குறிப்பை அள்ளி விட்டிருக்கிறார்.  ஏற்கனவே சொன்னேன் அவர் ஒரு philanthropist என்று.  அது இந்தக் குறிப்பிலும் தெரிகிறது.  ரொம்பவே அடக்கமானவரும் கூட.  அவருடைய காமெண்ட் இது: ”அளவுக்கதிகமான அன்பினால் இதை எல்லாம் சொல்றீங்க சாரு. நான் இதுக்கு தகுதியானவனான்னு தெரியல. ஆனா, என் பொருட்டு ஏதாச்சும் நடந்திருந்தா அதற்கான உரம் குருநாதர்களான நீங்கள்தான்.” ஜெகாவுக்கும் மற்றவர்களுக்குமான அறிவிப்பு: ”என்னைக் கத்தியால் குத்திக் கொல்ல வரும்போதும் ’இந்த உலகின் மகத்தான … Read more

மேலும் ஒருவர்…

சாரு நிவேதிதா பள்ளியிலிருந்து வெளிவந்தவர்கள் என இதுவரை கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ் என்று பலரைச் சொல்லலாம்.  கார்ல் மார்க்ஸ், சரவணன் சந்திரன் ஆகியோரிடம் சாருவின் தாக்கத்தை அதிகம் காணலாம் என்றாலும் அவர்களை நான் வளர்க்கவில்லை.  தூரத்தில் இருந்து பார்த்து அனுபவித்து வளர்ந்தவர்கள்.  நான் உரிமை கொண்டாட முடியாது.  மேலும் ஒருவர் இருக்கிறார்.  அதகளம் செய்யக் கூடியவர்.  விரைவில் வெளிவருவார்.  நேரில் பழகினால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருக்கும். இவர்கள் … Read more

ஞானக்கூத்தன்: பாரதிக்குப் பிறகு தோன்றிய மகத்தான கவிஞன்

ஜூலை 23-ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் ஞானக்கூத்தனைப்போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.  காரணம் , சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் ஒரு சமஸ்கிருத பாடலில் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களைப் பார்க்க  நேரில் வருகிறேன் என்று சொன்னபோது, “இல்லை , இல்லை . நான் உங்களைப் பார்க்க வருகிறேன்,” என்று சொன்னார். இந்த அடக்கம் ஞானக்கூத்தனுக்கே உரிய தனிப்பண்பு . ஆனால் அந்த அடக்கமே ஞானக்கூத்தனை தமிழ் சமூகம் … Read more

Norwegian Wood

பீட்டில்ஸின் நார்வேஜியன் வுட் பாடலை என் பதின்பருவத்திலிருந்து கேட்டு வருகிறேன்.  எத்தனை ஆயிரம் முறை என்ற கணக்கு இல்லை.  ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உணர்வெழுச்சி தாங்க முடியாமல் போகிறது.