உரையாடல் சாத்தியமில்லை…

வணக்கம் நான் உங்களின் நூல்களின் வாசகன் அல்ல. இராஜேஷ்குமார், சுபா, பாலகுமாரன், பிகேபி என்று படித்து முடித்து விட்டு சங்க இலக்கியம், கம்பன், திருவாசகம் என்று தாவி விட்ட ஆள். உங்களின் சமகாலத்தவர் ஜெயமோகனின் hyped படைப்பான விஷ்ணுபுரம் சுமார் நூறு பக்கங்கள் படித்து விட்டு, இத்தகைய தமிழ் இலக்கியமே வேண்டாம் என்று விட்டு விட்டேன். உங்களின் நூல்களும் அவரின் நூல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் அது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னைப் பற்றிய அறிமுகம் போதும். நான் சொல்ல வந்த … Read more

நிம்மதி (2)

எழுதி முடித்துத் திரும்புவதற்குள் தொலைபேசியில் நண்பர் கேட்டார், எப்படி திடீரென்று பணத்துக்கு இவ்வளவு மதிப்பு தருகிறீர்கள் என்று. என் குறிப்பில் அப்படியா இருக்கிறது குறிப்பு?  என் வாழ்வில் பணத்துக்கு இடமே இல்லை.  கடுகத்தனை கூட இடம் இல்லை.  முக்கியத்துவம் இல்லை. ஒரு சமீபத்திய உதாரணம்.  மாதத்தில் நாலு வகுப்பு எடுத்தால் போதும்.  ஒரு வகுப்புக்கு 5000 ரூ.  மாத வருமானம் இருபதாயிரம் ஆச்சு.  ஒரு மாதம் எடுத்தேன்.  மாணவர்களுக்கு நான் தமிழ் சினிமாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை.  நிர்வாகியான … Read more

நிம்மதி

இத்தனை நாள் என் எழுத்தையும் நேரத்தையும் சமூகத்துக்கு தானமாகக் கொடுத்து விட்டு, தட்சிணை கொடுங்கள் என்று கையேந்தினேன்.  பதிலுக்கு சமூகம் என்னைப் பிச்சைக்காரன் என்றது.  இப்போது டெக்னிக்கை மாற்றி விட்டேன்.  இனிமேல் என் எழுத்தும் நேரமும் இலவசம் கிடையாது.  கட்டணம் கொடுங்கள்.  இந்த முடிவில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.  என் எழுத்தை விட இனிமேல் என் நேரத்துக்குத்தான் கட்டணம் வசூலிக்க இருக்கிறேன். நேற்று ஒரு முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு.  … Read more