Ecstasy

இப்படி ஒரு நடன ரகளையை என் வாழ்நாளில் கண்டதில்லை.  முப்பத்து நான்கு நிமிடம் பொறுமையாகப் பாருங்கள்.  நான் சொல்வது புரியும்.

நிகனோர் பார்ராவை விட உசத்தியான கவிஞன்…

இப்படிச் சொல்வதால் பார்ராவை மட்டம் தட்டி விட்டதாக எண்ணக் கூடாது.  நான் உலக இலக்கியத்தின் மாணவன்.  சும்மாவாச்சும் போகிற போக்கில் தட்டி விடுகிறவன் கிடையாது.  முழுமையாக நிகனோர் பார்ராவைப் படித்ததால்தான் இப்படிச் சொல்கிறேன்.  பார்ராவை விட நல்ல கவிஞன் மனுஷ்ய புத்திரன். ஏற்கனவே பார்ராவின் கடைசிக் கோப்பை என்ற கவிதையை அதே விஷயத்தை மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதையோடு ஒப்பிட்டு மனுஷின் கவிதை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று நிறுவியிருந்தேன்.  ஆக, பார்ராவுக்குக் கொடுப்பதற்கு முன்னால் மனுஷுக்கு … Read more

என் அன்பு மகனுக்காக, ஹீனா கி குஷ்பூ…

என் அன்பு மகனே, துக்கத்தில் இருக்கும் போது மது அருந்தாதே.   பத்து ஆயுளுக்கு உண்டான குடியை நான் குடித்திருக்கிறேன்.  ஆனால் ஒருபோதும் துயரத்தில் குடித்ததில்லை.  குடி என் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.  இப்போது குடியை விட கொண்டாட்டமான விஷயங்கள் வாழ்வில் குடி புகுந்து விட்டன. நீ இங்கே வரும் போது தஹியா உணவு விடுதியில் ஒரு மணி நேரம் பேசுவதோடு நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.  அதிலும் உனக்குக் கடல் உணவு பிடிக்காது என்பது ஒவ்வொரு … Read more

ஒரு அற்புதத் தருணம்

ஒரு அற்புதத் தருணம் பற்றி முகநூலில் ஜெகா எழுதியிருக்கிறார்: 2014 டிசம்பர் சமயத்தில் ‘இந்தப்பாடல் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக திரையிட வேண்டும். இதுதான் நான், இதுதான் எக்ஸைல். வட்டத்து நண்பர்கள் யாராவது இதை சேமித்து அன்று திரையிட முடியுமா’ என்று கேட்டிருந்தார் சாரு. வளமை போலவே ஃபேஸ்புக்கில் நிறையப்பேர் அதைப் பகடி செய்திருந்தார்கள். ப்ரொஜக்டர், ஸ்க்ரீன் சகிதம் எல்லாம் தயாராக இருந்தது. எஸ்ரா மனுஷ் என எல்லோரும் இருக்க சாரு தருண் அருகில் இருந்தார். அவர் … Read more

அடியேனைப் பற்றி ஜெகா…

ஒரே ஒரு மனித ஜீவியின் பிரிவுதான் ஸீரோ டிகிரி நாவலாக வந்தது. வருத்தத்தை, துக்கத்தை வேறு ஒரு எண்ணமாக, சிந்தனையாக, வஸ்துவாக மாற்ற முயல வேண்டும். அது ஒரு மகத்துவத்தைக் கொண்டு வரும். – சாரு இனி வருவது ஜெகா, முகநூலில்… 2014 புத்தகக் காட்சி சமயம், சாரு மற்றும் நண்பர்களுடன் ஜிஆர்டி க்ராண்ட் ரூப் டாப்பில் உட்கார்ந்திருந்தோம். அவர் அப்போது மது அருந்துவார். அவருக்கு அர்ஜண்டினியன் ஒய்ன், நா வழக்கம் போல ஜேடி, நண்பர்கள் பியர். … Read more