ப்ரும்மம்

வொய்ட்டி, ப்ளாக்கி, ப்ரௌனி என்று மூன்று தெரு நாய்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவைகளும் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைவதை நிறுத்தி விட்டு செயின் திருடர்களைப் பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.  (எங்கள் ஏரியாவில் செயின் திருடர்கள் ஜாஸ்தி.  பைக்கில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவிக் கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களுக்கு என்ன தலையெழுத்தா, ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு தெருவைத் துப்புரவு செய்வதற்கு?)  எங்கள் தெருவின் பெயர் வெங்கடசாமி தெரு.  இந்தத் தெருவில் பதினோரு வருடங்களாக இருந்தாலும் … Read more

zero degree publishing

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்.  ஐந்தாறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நூல்களும் 2000 பிரதிகள்தான் விற்கின்றன.  ஜீவனோபாயத்துக்குக் கொஞ்ச காலம் பேராசிரியர் வேலை பார்த்தார்.  இப்போது மாதத்தில் 15 நாள் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  உலகம் பூராவும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன.  கலந்துரையாடல்கள், novel reading sessions, seminars, இப்படி இப்படி.  அவரைத் தொலைபேசியிலேயே பிடிக்க முடியவில்லை.  மின்னஞ்சலில்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.  பிற மொழி எழுத்தாளர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  … Read more

நடிகர்களும் அரசியலும்

ArtReview Asia பத்திரிகையில் தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் சேவை, இலக்கியச் சேவை குறித்து – குறிப்பாக கமல்ஹாசன் – விரிவாக எழுதியிருக்கிறேன்.  கடைசியில் கமல்ஹாசனை ஐரோப்பிய இலக்கியக் கலை உலகத்துக்கு அறிமுகம் செய்து விட்டேன்.  முடிந்தவர்கள் ArtReview Asiaவை இணையத்திலேயே வாங்கிப் படிக்கலாம்.  வழக்கம் போல் பிரபு காளிதாஸின் ரஜினி புகைப்படம் ஒன்று வந்துள்ளது.  மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 60 அடி கட் அவுட் புகைப்படமும் வெளிவந்துள்ளது.  வாங்கிப் படித்து இன்புறவும்.

ஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்…

      இந்த மாத தடம் இதழில் காயத்ரி ஆர். மொழிபெயர்த்துள்ள ஆன் எபரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.  விளிம்பு நிலை மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ள இந்தக் கதை உதவும்.  இந்த எழுத்தாளரைப் படித்த போதுதான் கனடாவில் ஃப்ரெஞ்ச் இரண்டாம் மொழியாக இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.  காயத்ரி இந்தக் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கியிருக்கிறார்.  இடையில் ஒரு கை இல்லாமல் நேரடியாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.  பொதுவாகவே நான் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை … Read more