மனுஷ்ய புத்திரன் – ஜெயமோகன்

உஸ்பெகிஸ்தானின் ஸாமர்கண்ட் நகரிலிருந்து இதைப் பதிவிடுகிறேன்.  மனுஷ்ய புத்திரன் கவிதை மீது எழுந்த பிரச்சினை குறித்த ஜெயமோகனின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளவும்.  இது பற்றிய என் நிலைப்பாடு இதுதான் https://www.jeyamohan.in/112345#.W3_w6aRRWEe

ஹெச். ராஜாவின் அவதூறுக்கு எதிராக மனுஷ்ய புத்திரன்

என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள் மனுஷ்ய புத்திரன் ……………. எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள்.என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை. நேற்று ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலைமிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக குறுஞ்செய்திகளாக ஆபாசச்செய்திகள், கொலை மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை

மெதூஸாவின் மதுக்கோப்பை நூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 250 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகை செப்டெம்பர் 6-ஆம் தேதி வரை மட்டுமே. https://tinyurl.com/medusacharu

ராயப்பேட்டை புத்தகக் கண்காட்சி…

ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் விருட்சம் அரங்கிலும், பனுவல் அரங்கிலும், டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கிலும் கிடைக்கும். நாளையிலிருந்து ஹிக்கின்பாதம்ஸ் அரங்கிலும் கிடைக்கும்.

பூனைக்குட்டிகள்… (2)

டியர் சாரு… பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொல்லி வருகிறீர் உங்களது ஜாதகத்தையோ கைரேகையோ பார்த்த 2,3ஜோதிடர்கள் நீங்கள் நிச்சயம் —–வயது வரை இருப்பீர்கள் என சொன்னதாகவும் அதை நீங்கள் நம்புவதாகவும் எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஜோசியர் சொன்னதை நம்பியதும் அவர்கள் பூனை குறுக்கே செல்வதை  அபசகுனம் என நம்புவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று வேறு வேறு அல்ல. உங்களைத் தொடர்ந்து … Read more

பூனைக் குட்டிகள்

இதைத் தட்டச்சு செய்யும் போது என் கைகள் கோபத்தால் நடுங்குகின்றன. இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன கவியின் கோபத்தில் எழுதுகிறேன். நாங்கள் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறோம். இந்த அபார்ட்மெண்ட்டில் பெரிய விஐபிகள் தான் குடியிருக்கிறார்கள். ஒரே ஒரு வட இந்தியக் குடும்பமும் உண்டு. சற்று நேரத்துக்கு முன்பு, அவந்திகா நான் இன்னும் சாப்பிடவில்லை; பசிக்கிறது; கீழே உள்ள பூனைக் குட்டிகள் பசியில் கத்துகின்றன; போய் உணவு கொடுத்து விட்டு வா என்றாள். நிறைய பூனைக்குட்டிகள் இருந்தன. … Read more