தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 3

என்னிடம் கேமரா இல்லாததால் மாச்சு பிச்சுவை விசேஷமாகப் படம் எடுக்க முடியவில்லை. என்னுடைய ஐஃபோனில் எத்தனை வருமோ அத்தனைதான் எடுத்தேன். மேலும் ரெண்டு விடியோ எடுத்தாலே (அஞ்சு நிமிஷம்) ‘உன்னுடைய ஸ்டோரேஜ் தீர்ந்து விட்டது’ என்ற அறிவிப்பு வந்து விடுகிறது. அதனால் மாச்சு பிச்சுவை சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். பின்வரும் இணைப்பில் நாலரை நிமிடம் ஓடும் ஒரு அருமையான விடியோ உள்ளது. பாருங்கள்.

சமஸ்: சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்

வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு … Read more