Thug life…

ஆறு மாதங்களுக்கு முன்னால் எஜமானை வேண்டிக் கொண்டேன். எந்தக் காரியத்துக்காகவும் கடவுளையோ குருநாதரையோ வேண்டுவதில்லை. அப்பனுக்கும் குருவுக்கும் தெரியாதா பிள்ளையின் தேவை என்று நினைப்பு. ஆனால் உயிருக்குயிரானவர்களின் மரணம் தாங்க முடிவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் எஜமானை வேண்டிக் கொண்டேன். உயிர் திரும்ப வந்தது. எப்போது போவது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. அதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். எழுத்து விஷயத்தில் வாக்குக் கொடுக்காமலே காப்பாற்றுவேன். பணம் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் … Read more

கிரிமினல்கள்…

கூர்க் சென்றிருந்த போது அங்கே இருந்த மக்கள் தூரத்தில் தெரிந்த மலைகள் பலவற்றைக் காண்பித்து எல்லாம் உங்கள் சிதம்பரத்தினுடையது என்றார்கள். எல்லாம் காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம். நூற்றுக் கணக்கான ஏக்கர் இருக்கும். பெரிய ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். தில்லியிலும் ராஜாவாகவே ஆண்டவர். ஜனநாயக நாடு என்பதால் அமைச்சர் என்கிறோம். நிதி அமைச்சராக, இன்னும் என்னென்னவோ முக்கிய முக்கிய அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தவர். இப்போது ஊழல் வழக்கில் லோக்கல் கேடியைப் போல் தலைமறைவாக இருக்கிறார். இப்போது … Read more

அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்

அய்யனாரின் கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது அவரோடு ஒரு நேர்காணல் செய்யலாம் என்று தோன்றியது. முதல் இரண்டு கேள்விகளை இங்கே தருகிறேன். அவர் பதிலை இங்கே முகநூலில் கொடுக்காமல் புத்தகத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் சஸ்பென்ஸ் இருக்கும். இனி கேள்விகள்: கேள்வி: உங்கள் முன்னுரையில் இந்தத் தொகுதிக்கும் முன்பாக மூன்று தொகுதிகள் வந்திருப்பதை அறிந்தேன். இதுவரை தெரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். இங்கே யாரும் கவிதை பற்றிப் பேசுவதில்லை. சூழல் அப்படி இருக்கிறது. நானும் … Read more

ஒரு சட்ட உதவி

சட்டம் பயின்றவர்கள் உதவி செய்யக் கோருகிறேன். மிகவும் முக்கியம். நான் குடியிருப்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. ரெசிடென்ஷியல் ஏரியா. இங்கே தரைத் தளத்தில் வெய்ட் ரோஸ் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இப்போது அதை எடுத்து விட்டார்கள். இப்போது அங்கே இன்னொரு ஷோ ரூம் வருவதற்காக தினமும் காலை ஏழு மணியிலிருந்து இரவு 10 மணி வரை டங்க் டங்க் என்று இடித்துக் கொண்டும், சுவரில் ட்ரில்லிங் மெஷின் கொண்டு துளைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பத்து பிஹாரி … Read more

நார்த்தங்காய்

மாதம் சுமார் பத்துப் பனிரண்டு பேர் சந்தா அனுப்புவார்கள். இந்த மாதம் அதில் ஒருத்தர்தான் அனுப்பியிருந்தார். மற்றவர்கள் கவனிக்கவும். *** முகநூலில் ஒரு தகவல் கேட்பதெல்லாம் சுத்த வேஸ்ட். இருந்தாலும் வெளியுலகத் தொடர்பு எனக்கு முகநூல் மட்டும்தான் என்பதால் திரும்பவும் இங்கேயே வருகிறேன். பெர்ஷியன் பூனை பற்றிக் கேட்டிருந்தேன். முப்பது பேர் லைக் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். ராஜேஷ் மட்டும்தான் நேரில் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். பிறகு ஆன்லைனில் தேடிய போது ஒரு பூனை … Read more

காஷ்மீர்

அரசியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை நிர்மல் என் குரு. ஆயிரம் பக்க புத்தகங்களையெல்லாம் அனாயாசமாக ஒரு வாரத்தில் படித்து அதன் சாரத்தை எனக்கு சொல்லுவார். ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர் என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தில் நான் fanatic. மத, இன அடிப்படையில் விசேஷ சலுகைகள் கொடுக்கப்படலாகாது. எல்லோரும் சமம். எல்லா மதமும் சமம். ஒரு அறிவுக் கொழுந்து என் காமெண்ட் பாக்ஸில் என்னென்னவோ வாய்க்கு வந்ததை எழுதியிருந்தது. 1947இல் இரண்டு நாடுகள் பிரிந்தது ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையில் … Read more