நேர் கொண்ட பார்வை – வினோபன் தியாகலிங்கம்

மருத்துனின் வாழ்வில் ஒரு கடினமான காலம் என்பது அவந்து இண்டேர்ன்ஷிப் காலம் தான்…சூரியன் உதிக்குமுன்னர் வார்டுக்கு சென்று சூரியன் மறைந்த பிறகு தான் எமது குவார்ட்டர்சுக்கு வரலாம்…கிட்டத்தட்ட சொல்லதானால் ஆசான் Charu Nivedita எழுதிய ராசலீலாவில் வரும் ஸ்டெனோ கண்ணாயிரம் பெருமாளின் வாழ்க்கை..அந்த வாழ்க்கையை வாழ்வதை விட இறந்துவிடலாம் எனத்தோன்றும்…ஒருமாதிரியாக அந்த ஒருவருடத்தை முடித்து RHOஆக புரொமோட் ஆகி NHSL vascular surgery unit க்கு மாற்றலாகி இருந்தேன்.. அந்த யூனிட்டில் நான் மட்டுமே ஒரு சின்னப்பெடியன்..எல்லோரும் வயது வந்தவர்கள்,சிங்களவர்கள்……நான் … Read more

யார் ஹெடோனிஸ்ட்? (3)

ஆகஸ்ட் 9 அன்று முகநூலில் காயத்ரி எழுதிய பதிவு பின் வருவது: பொதுவாக நான் Fb ல் just an observer. எந்த வம்புக்கும் போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதாவை fake Hedonist என்று ஒருவர் சாம்நாதன் ஸ்டேடஸில் பின்னூட்டமிட்டிருக்கிறார் மற்றும் சாம் ஐ தன் சீடன் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் தன் நிலையை சாரு உயர்த்திக் கொள்கிறார் என்று எழுதியிருந்தபோது எரிச்சலடைந்தேன். What does he know about Charu? ஹெடோனிஸம்னா எப்போதும் பெண்களோடு … Read more

யார் ஹெடோனிஸ்ட்? (2)

ராஜ சுந்தரராஜன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே வருவது: வெளிவிளக்கம்_______________ அனுபவித்தலும் அனுபவித்ததாகப் பாவித்தலும் ஒன்றுதான். எனது “இரண்டாம் விதி” (August 6, 2019) பதிவில் இது உணர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றை இழித்து மற்றொன்றை உயர்த்த வேண்டியதில்லை. அனுபவித்தல் புறவயமானது. பாவித்தல் அகவயமானது. சங்கத்தமிழ்க் கவிதைகளை ஆழ்ந்தறிந்த எவர்க்கும் ஆண்பாற் கவிஞர்கள் தலைவி/ தோழி/ செவிலி கூற்றுக் கவிதைகளை பாவித்தே எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். ஒரு சுமைதூக்கி, ஓள் ஓட்பவன்/ள், மந்த்ரங்கள் ஓதுபவன்/ள் எவனும்/ளும் புறவயமானவரே. ஒரு … Read more

the sculptors of classical tamil…

நிகழ்ச்சியை நடத்தும் அஜயன் பாலாவும் தன்னை சிரமப்படுத்திக் கொண்டு கலைப்பணி செய்பவர்தான்.  நிகழ்ச்சியில் எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார்கள்.  அந்தப் பொன்னாடையின் விலை எவ்வளவு இருக்கும் என்று தெரியாது.  500 ரூபாய் இருக்குமா அல்லது ஆயிரமா, எப்படி இருந்தாலும் அந்தப் பணத்தை என் கையில் கொடுத்திருந்தால் பூனையின் உணவுக்கு ஒரு நாலு நாள் வந்திருக்கும்.  அதோடு விட்டிருந்தால் இந்தப் பதிவை எழுதியே இருக்க மாட்டேன்.  கையில் அன்புப் பரிசாக அஜயன் பாலா தொகுத்த ஒரு பெரிய நூலைக் … Read more

இரந்து வாழ்தல்…

கூட்டங்களில் பேச அழைக்கிறார்கள்.   நட்பின் காரணமாக நானும் செல்கிறேன்.  பணம் எதுவும் கொடுப்பதில்லை.  நானும் கேட்பதில்லை.  தெரியாதவர்களாக இருந்தால் கேட்கிறேன்.  கொடுப்பதில்லை.  ஆனால் பணம் கேட்டவுடனேயே அழைப்பதை ரத்து செய்து விடுகிறார்கள்.    ஓசியில்தான் வர வேண்டும்.  வர முடியுமா?  இல்லைங்க, முடியாது.  அப்டீங்ளா, சரி.  கதை முடிந்தது.  அது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஆனால் நட்புக்காகப் போவதில் சில சிக்கல்கள்.  கார் அனுப்புவார்கள்.  கொண்டு வந்து விடுவார்கள்.  அத்தோடு சரி.  ஆனாலும் தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் … Read more