யார் ஹெடோனிஸ்ட்?

சாம்நாதன் பற்றி ராஸ லீலா கலெக்டிபிளில் எழுதியிருந்த பின்வரும் குறிப்பை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பை சாம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறான்.  உடனே சாமின் முகநூல் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார்.  முதலில் என் குறிப்பு; அதைத் தொடர்வது சாமின் முகநூல் நண்பரின் எதிர்வினை.  ”சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, … Read more

சாம்நாதன் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே:

சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை என்னைக் கேட்டாள் காயத்ரி. உண்மைதான். இந்தப் பத்து ஆண்டுப் பழக்கத்தில் ஓரிரு முறைதான் ஃபோனில் பேசியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்புகளில் பல மணி நேரம் பேசியதுண்டு. பல மணி நேரம் என்றால் ஒரு இரவு முழுக்க என்று பொருள். அப்படி இரண்டுமூன்று இரவுகள் போகும். இமயமலைக்குப் … Read more

பாலாஜி ஜி. சேகர் பற்றி ராஸ லீலா கலெக்டிபிளில் எழுதியது:

எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அது ஒரு பாக்கியம் என்பது உண்மையாக இருந்தால். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிப்பது ஒருவித narcissism தானே தவிர வேறில்லை. தங்களின் நீட்சியாகத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்கிறார்கள். Designated Survivor என்ற வெப்சீரீஸில் ஒரு இடம்: சந்தர்ப்பவசத்தினால் அமெரிக்க அதிபராக ஆகும் டாம் கர்க்மெனை அந்தப் பதவியிலிருந்து நீக்க பலரும் முயற்சிக்கிறார்கள். டாமின் மனைவி அலெக்ஸுக்கு அவரை மணப்பதற்கு முன்னால் ஒரு காதலன் இருந்தான். அவன் ஒரு கிரிமினல் என்று … Read more

தேவ சுப்பையா பற்றி…

தேவா என்று நான் மிகப் பிரியத்துடன் அழைக்கும் தேவ சுப்பையாவின் அறிமுகமும் நட்பும் எனக்கு சென்ற ஆண்டு ஷார்ஜா சென்ற போது கிடைத்தது. அமீரக நண்பர்களால் அண்ணன் என்று அழைக்கப்படும் தேவா ஒரு அற்புதமான மனிதர். அவரிடம் எனக்கு மிகப் பிடித்தது அவர் தன் உடல்நலத்தைப் பேணுவது. ஒரு இந்திப் பட ஹீரோ மாதிரி உடலைப் பேணுவது – வயிறும் முதுகும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை சுலபமான … Read more

ராஸ லீலா கலெக்டிபிளில் அருணாச்சலம் பற்றி எழுதியது:

மதுரையில் வசிக்கும் அருணாச்சலத்தைத் தெரியாத இலக்கிய வாசகர் யாரும் இருக்க முடியாது. அவருடைய மேகா பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தார். நானும் ஒரு தேதியைக் கொடுத்திருந்தேன். அவரும் பணம் கொடுத்து அந்தத் தேதியில் அரங்கத்தை முன்பதிவு செய்து விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே தேதியில் வேறொரு தவிர்க்கவே முடியாத நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தேன் போல. அது கேரளா. கடைசியில்தான் அந்த விஷயம் எனக்குத் தெரிந்து “வேறு பலரும் கூட பேசுகிறார்கள் இல்லையா, எப்படியோ சமாளித்துக் கொள்ளுங்கள் … Read more

ராஸ லீலா கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதில் சில நண்பர்களுக்கான டெடிகேஷன் பக்கத்தில் எழுதியது: அய்யனார் விஸ்வநாத் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே: அய்யனார் விஸ்வநாத்தை, அவர் இந்தியாவில் இருந்த போது இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பு திருவண்ணாமலையில். உடன் இருந்தவர் கருந்தேள் ராஜேஷ். எங்கள் பேச்சுக்களாலும் கொண்டாட்டங்களாலும் அந்த இரவு நிறைந்தது. விடியலில்தான் தூங்கப் போனோம். இரண்டாவது சந்திப்பு மிஷ்கின் அலுவலகத்தில். நந்தலாலா ப்ரிவியூ படம் … Read more