கிரிமினல்கள்…

கூர்க் சென்றிருந்த போது அங்கே இருந்த மக்கள் தூரத்தில் தெரிந்த மலைகள் பலவற்றைக் காண்பித்து எல்லாம் உங்கள் சிதம்பரத்தினுடையது என்றார்கள். எல்லாம் காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம். நூற்றுக் கணக்கான ஏக்கர் இருக்கும். பெரிய ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். தில்லியிலும் ராஜாவாகவே ஆண்டவர். ஜனநாயக நாடு என்பதால் அமைச்சர் என்கிறோம். நிதி அமைச்சராக, இன்னும் என்னென்னவோ முக்கிய முக்கிய அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தவர். இப்போது ஊழல் வழக்கில் லோக்கல் கேடியைப் போல் தலைமறைவாக இருக்கிறார். இப்போது … Read more

அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்

அய்யனாரின் கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது அவரோடு ஒரு நேர்காணல் செய்யலாம் என்று தோன்றியது. முதல் இரண்டு கேள்விகளை இங்கே தருகிறேன். அவர் பதிலை இங்கே முகநூலில் கொடுக்காமல் புத்தகத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் சஸ்பென்ஸ் இருக்கும். இனி கேள்விகள்: கேள்வி: உங்கள் முன்னுரையில் இந்தத் தொகுதிக்கும் முன்பாக மூன்று தொகுதிகள் வந்திருப்பதை அறிந்தேன். இதுவரை தெரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். இங்கே யாரும் கவிதை பற்றிப் பேசுவதில்லை. சூழல் அப்படி இருக்கிறது. நானும் … Read more