காஷ்மீர் (2)

”இந்த சட்ட நீக்கத்தைஅறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில்  வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு.  அதற்கான அவசியம்தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே  அறிந்து ஒரு மாநிலத்தின் மீது “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தொடுப்பது சர்வாதிகாரத்தின்  உச்சம் அல்லவா!” அபிலாஷ் எழுதியிருந்த பத்தி இது.  உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்காவிட்டால் இந்நேரம் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்.  அதை அனுமதிக்கும் அளவுக்கு அத்தனை முட்டாள்தனமான அரசாங்கமா இது?  இந்த நடவடிக்கையில் எந்த சர்வாதிகாரமும் எனக்குத் தெரியவில்லை.  மேலும், காஷ்மீரிகளிடம் இப்போது ”உங்கள் விருப்பம் என்ன?” என்று … Read more

காஷ்மீர்

என் எழுத்தை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் இதற்குள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவர்கள் என் கருத்துக்களோடு முரண்படலாம்.  ஆனாலும் இந்த விஷயத்தை அவர்கள் கவனித்திருக்கலாம்.  அதாவது, எந்தப் பிரச்சினை குறித்தும் அந்தப் பிரச்சினையின் அடிப்படையை வைத்துத்தான் அணுகுவேன்.  உதாரணமாக, நான் மோடி எதிர்ப்பாளன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அதனால் அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்க மாட்டேன்.  இதுதான் பிரச்சினையின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது.  இதை நான் பெரியாரிடமிருந்தே கற்றுக் … Read more

இரண்டு கிழவர்கள்

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,தற்போது டால்ஸ்டாயின் பல்வேறு சிறுகதைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறேன். தாங்கள் டால்ஸ்டாயின் இரண்டு கிழவர்கள் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவரவே அதைத் தமிழாக்கம் செய்து அமேசானில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.https://www.amazon.in/dp/B07W3Q9K39/அன்புடன்,கேசவமணி