கலைஞனாக வாழ்தல் குறித்து…

என் மீதும் என் எழுத்தின் மீதும் பேரன்பு கொண்ட நண்பர்களுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  தலைக்கு மேல் கிடக்கிறது வேலை.  இருந்தாலும் உங்கள் மீது கொண்ட தீரா அன்பினால் இதை எழுதுவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமை இரவு ஏழெட்டு நண்பர்கள் அறைக்கு வந்தார்கள்.  அதில் ஒருவர் ஸ்பெயின் போய் விட்டு வந்திருந்தார்.  பேசி முடித்த போது காலை ஐந்தரை.  தூங்கி எழுந்து கொள்ளும் போது மதியம் இரண்டு.  … Read more

அமெரிக்கப் பயணம் – சில முன்குறிப்புகள் (5)

இதற்கு முன்னால் எழுதிய நான்கு குறிப்புகளையும் ஒரு ஓட்டமாகப் படித்துக் கொண்டு இதைத் தொடரலாம்.  நியூஜெர்ஸியில் வசிக்கும் – மணி என்று நான் அன்புடன் அழைக்கும் மணிசேகரனோடு பேசிக் கொண்டிருக்கும் போது என் பயணங்களின் தன்மை பற்றி விளக்கினேன்.  உதாரணமாக, பாரிஸ் போனால் அந்நகரின் பிரபலமான ஈஃபிள் டவரைப் பார்க்க எனக்கு விருப்பம் இருக்காது.  அதை விட அந்நகரில் உள்ள catacombs-ஐப் பார்க்க விருப்பப்பட்டு அங்கே போனேன்.  பொதுவாக நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  … Read more

தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 3

என்னிடம் கேமரா இல்லாததால் மாச்சு பிச்சுவை விசேஷமாகப் படம் எடுக்க முடியவில்லை. என்னுடைய ஐஃபோனில் எத்தனை வருமோ அத்தனைதான் எடுத்தேன். மேலும் ரெண்டு விடியோ எடுத்தாலே (அஞ்சு நிமிஷம்) ‘உன்னுடைய ஸ்டோரேஜ் தீர்ந்து விட்டது’ என்ற அறிவிப்பு வந்து விடுகிறது. அதனால் மாச்சு பிச்சுவை சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். பின்வரும் இணைப்பில் நாலரை நிமிடம் ஓடும் ஒரு அருமையான விடியோ உள்ளது. பாருங்கள்.

சமஸ்: சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்

வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு … Read more

தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 2

அத்தாகாமா பெரூவின் தென்கோடியில் உள்ள ஒரு ஊர் தாக்னா.  அந்த ஊர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என் சொந்த ஊர் மாதிரி என் மனதில் தங்கி விட்டது.  ஏனென்றால், அங்கேதான் என் நண்பர் கிருஷ்ண ராஜ் வசிக்கிறார்.  அவரைப் பற்றி விகடன் இணைய தளத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுத ஆரம்பித்த கோணல் பக்கங்களில் நிறைய எழுதியிருக்கிறேன்.  அவரோடு அப்போது பல மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அந்த உரையாடல்களையெல்லாம் கோணல் பக்கங்களில் … Read more