முதல் வீடும் ரெண்டாம் வீடும்…

சமீபத்தில் நாகூருக்குச் சென்றிருந்தேன்.  நான் வசித்த கொசத்தெருவில் உள்ள நான் வளர்ந்த வீட்டுக்கும் சென்றேன்.  எப்போது நாகூர் போனாலும் கொசத்தெருவில் நான் வளர்ந்த வீட்டுக்குப் போவதுண்டு.  ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வளர்ந்த வீடு.  அதற்கு முன்னால் வெங்கட்டு சந்து.  அது இப்போது பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது.  நாங்கள் இருந்த கொசத்தெரு வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாழ்கிறது.  ரொம்ப அருமையான மனிதர்கள்.  ஒவ்வொரு முறை நான் அங்கே போகும் போதும் என்னை … Read more

பொக்கிஷம் – 2

R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது: இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. … Read more

பொக்கிஷம்

அன்புள்ள ராம்ஜி, காயத்ரி, என்னுடைய நீண்ட கால நண்பர் R.P. ராஜநாயஹம் முகநூலில் எழுதி வரும் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதை நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூட சொல்லியிருக்க முடியும். ஆனால் அவரைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல. அவர் … Read more

ஹலோ கூட சொல்ல மாட்டேன்…

2013-இல் எழுதிய ஒரு கடிதம் இது: சாரு அவர்களுக்கு, உங்களுடைய ஹலோ கூட சொல்ல மாட்டேன் பதிவில், இரண்டு துணுக்குகளைச் சொல்லி இருந்தீர்கள். ஒன்று, சார்த்தரைப் பற்றி. மற்றது  பர்ரௌஸைப் பற்றி. இரண்டு துணுக்குகளிலும் நிறைய தகவல்/கருத்துப் பிழைகள். பர்ரௌஸைப் பற்றிய விஷயம்  முதலில் பர்ரௌஸ்.  அவர்  தன் மனைவியைக் கொன்றது தஞ்ஜியரில் அல்ல.  அது நடந்தது மெஹிகோவில்.  அந்த துர்சம்பவம் நடந்த சமயம் அவர் அமெரிக்க அரசாங்கத்தின் சிறையில் இருந்து தப்பிப்பதற்காக மெஹிகோ ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்.  … Read more

அக்கப்போர் – 2

கார்ல் மார்க்ஸ் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எனக்கு வயதாகி விட்டது, கனிந்து விட்டேன் என்று சொல்லும் யார் மீதும் நான் அப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எப்போதும் பிரயோகிக்கிறேன். அதையேதான் இப்போதும் செய்தேன். ஆனால் என் வார்த்தைகள் கார்ல் மார்க்ஸை பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது என்பதை அவர் மேலும் ஒரு அவதூறையும் ஒரு மிரட்டலையும் வைத்திருப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அவதூறும் மிரட்டலும் கீழே: ”நீங்கள் விதந்தோதும் ஒரு படைப்பை அது குப்பை என்று உங்களிடம் நேரில் சொல்லும் … Read more

அக்கப்போர்

ஏராளமாக வேலை இருக்கிறது. ஒரு நாளில் நாற்பது மணி நேரம் இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எழுதிக் குவித்ததையெல்லாம் தொகுக்க வேண்டும். நாவல், பயணக் கட்டுரை, அடுத்த பயணத்துக்கான ஏற்பாடு, உடல் நலம், இத்யாதி இத்யாதி. இந்தக் கொடூர அவசர வாழ்வில் கண்ட கண்ட விவகாரத்தில் எல்லாம் ஈடுபட நேரம் இருப்பதில்லை. இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் தனது பதிவு ஒன்றில் என்னையும் இழுத்து அவதூறு செய்திருக்கிறார். முன்பு போல் இருந்தால் வேறு … Read more