உரையாடல் தொடர்கிறது…

அன்புக்குரிய அய்யனார், நேற்று (14.9.2019) உங்கள் கேள்வியைப் படித்து விட்டு சந்நதம் வந்தது போல் மேற்கண்ட பதிலைத் தட்டினேன்.  படு வேகத்தில் தட்டச்சு செய்ததில் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலான நரம்புகளும் விரல்களும் நடுங்க ஆரம்பித்து விட்டன.  அத்தனை வேகம்.  மனதில்.  திடீரென்று யூரிபிடஸின் (Euripides) மெடியா நாடகத்தில் வரும் மெடியாவின் சோகம் என்னை ஆக்ரமித்துக் கொண்டது.  மெடியாதான் சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கி வந்த இலக்கியவாதிகள்.  கணவனால் புறக்கணிக்கப்பட்டு தன் குழந்தைகளைக் கொன்ற அவளது கண்ணீர்தான் இலக்கியவாதிகளின் கதை.  … Read more

கடவுளைக் காண வாருங்கள்…

வாக்கிங் போய் விட்டு வந்து அய்யனாருக்கு பதில் எழுத அமர்ந்தேன். அசோகமித்திரனின் இருவர் குறுநாவலில் வரும் வாலாவின் ஞாபகம் வந்தது. கூடவே சி.சு. செல்லப்பாவின் சாந்தி (ஜீவனாம்சம்), ந. முத்துசாமியின் நீர்மை சிறுகதையில் வரும் பத்தாவது வயதில் வாழாவெட்டியாகி தொண்ணூறு வயதுக்கு மேல் இறந்த அந்த அவளையும் ஞாபகம் கொண்டேன். முடிந்தது கதை. எழுத முடியவில்லை. யூரிப்பிடஸின் மெடியா ஞாபகம் தொற்றியது. இந்தப் பெண்களையெல்லாம் நினைத்த போது ஜொஹான் பாக்ஹெல்பெல்லின் (1653 – 1706) சில இசைக் … Read more

தேரி காண்ட் மே தண்டா தேதூங்கா…

இதோ பாருங்க… நேரடியா விஷயத்தைச் சொல்லிடுங்க. இனிமே இந்திதான் எல்லோரும் படிக்கோணும். எழுதோணும். தாய் மொலி நாய் மொலி. மதறாஸீங்கள்ளாம் காய்கறிக்காரங்க கிட்டேயும் குப்பை அள்றவண்ட்டயும் தமில்லெ பேசுறாப்ல எல்லா நாய்ங்களும் தாய் மொலிய காய்கறிக்காரண்ட்டயும் குப்பை அள்றவண்ட்டயும் பேசி மொலிய வளருங்க. மத்தபடி ஒலக அரங்குல இந்தி பேசுனாதான் மரியாதை. இனிமே எல்லாரும் இந்தீலதான் பெற்றோர்ட்ட பேசணும். இந்தீலதான் பரீக்ஷைலாம் எழுதணும். மோடிஜீயைப் பாருங்க. அவரோட தாய்முலி குஜராத்தி. அவரு இந்திய எப்பூடிப் பேசுறாரு. வாஜ்பாயி … Read more