அக்கப்போர் – 2

கார்ல் மார்க்ஸ் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எனக்கு வயதாகி விட்டது, கனிந்து விட்டேன் என்று சொல்லும் யார் மீதும் நான் அப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எப்போதும் பிரயோகிக்கிறேன். அதையேதான் இப்போதும் செய்தேன். ஆனால் என் வார்த்தைகள் கார்ல் மார்க்ஸை பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது என்பதை அவர் மேலும் ஒரு அவதூறையும் ஒரு மிரட்டலையும் வைத்திருப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அவதூறும் மிரட்டலும் கீழே: ”நீங்கள் விதந்தோதும் ஒரு படைப்பை அது குப்பை என்று உங்களிடம் நேரில் சொல்லும் … Read more

அக்கப்போர்

ஏராளமாக வேலை இருக்கிறது. ஒரு நாளில் நாற்பது மணி நேரம் இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எழுதிக் குவித்ததையெல்லாம் தொகுக்க வேண்டும். நாவல், பயணக் கட்டுரை, அடுத்த பயணத்துக்கான ஏற்பாடு, உடல் நலம், இத்யாதி இத்யாதி. இந்தக் கொடூர அவசர வாழ்வில் கண்ட கண்ட விவகாரத்தில் எல்லாம் ஈடுபட நேரம் இருப்பதில்லை. இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் தனது பதிவு ஒன்றில் என்னையும் இழுத்து அவதூறு செய்திருக்கிறார். முன்பு போல் இருந்தால் வேறு … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்…

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற என் நூலை உங்களில் யாரும் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அதில் நேற்று முழுவதும் ஆழ்ந்து பிழைதிருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்தேன். அதை ஏன் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன் என்றால், அதில் உள்ள கட்டுரைகள் புதிய தலைமுறை இதழில் வந்தவை. நான் பொதுவாக ஒரு அச்சு இதழில் வந்ததை என் இணைய தளத்திலோ முகநூலிலோ பகிரும் வழக்கம் இல்லாதவன். உதாரணமாக, இப்போது குமுதத்தில் வரும் கட்டுரைகளை அவை … Read more