ஜாகை மாற்றுகிறேன்…

இப்போது இருக்கும் வீட்டிலேயே இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இருக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். வீட்டு உரிமையாளரும் அப்படித்தான் எண்ணியிருந்தார். வீட்டு உரிமையாளர் மிகவும் நல்லவர். ஆனால் பக்கத்து வீட்டு ரவுடியால் வீடு மாற்றும்படியான சூழல். நண்பர்கள் உதவி செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹமீதும் செல்வியும்தான் தெருத் தெருவாக அலைந்து எனக்காக மைலாப்பூரில் வீடு பார்த்துக் கொடுத்தார். இப்போது அவர் பெரிய இடத்தில் இருக்கிறார். அவருடைய நட்பு வட்டத்திலும் நான் இல்லை. மைலாப்பூர், மந்தவெளி, ஆர் ஏ … Read more

அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் உரையாடல்… (தொடர்ச்சி)

கேள்வி:  இங்கே தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைப்பதில்லை.  தி.ஜ.ரங்கநாதன் பற்றிய கட்டுரையை பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் சேர்த்து விட்டு, தி.ஜ.ர.வின் புகைப்படத்தையும் இணைத்திருந்தேன்.  பதிப்பாளரிடமும் போன் செய்து எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.  மாதிரி பிரதி என் பார்வைக்கு வந்தது.  பார்த்தால் தி.ஜ.ர.வின் கட்டுரையில் தி.ஜானகிராமனின் புகைப்படம்.  கோபத்தில் உடல் நடுங்க பதிப்பாளரை அழைத்தேன்.  அவரோ அழாக்குறையாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்.  விஷயம் என்னவென்றால், தி.ஜா. பற்றிய … Read more

சமூக விரோதிகள்…

நான் பிராமினாப் பிறந்ததைப் பெருமையா நினைக்கிறேன்; பிராமினுக்கு புத்தி அதிகம்; க்ஷத்ரியாளுக்கு உடல் வலிமை அதிகம் என்று சொன்ன ஒய்ஜி மகேந்திரன் மகளை பிராமண நண்பர்கள் காறித்துப்பி இருக்க வேண்டும். செய்யவில்லை. வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அப்படிக் காறித் துப்பாவிட்டால் பிராமண துவேஷம் அதிகமாகிக் கொண்டேதான் போகும். ஒரு கட்டத்தில் பெரியார் சொன்ன மாதிரி, பாம்பையும் பாப்பானையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் எந்த சாதியையும் ஆதரிப்பவன் … Read more