பந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)

ஒரு விளக்கம்: சுஜாதாவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னது புரியவில்லை.  சுஜாதாவிடமிருந்து நானும் கற்றவன் தான்.  மிக சுவாரசியமாக எழுதியவர் அவர்.  ஒருமுறை ஒரு கதையில் கணேஷ் நியாட்சே புத்தகம் படித்துக் கொண்டிருப்பான்.  அந்தக் காலத்தில் ஏது இண்டர்நெட்?  கல்லூரியில் உள்ள என்ஸைக்ளோபீடியாவில் N எழுத்தில் வரும் நியாட்சே முழுவதையும் தேடினேன்.  ஜெர்மானியத் தத்துவவாதியான நீட்ஷே தான் சுஜாதாவில் நியாட்சே ஆகியிருந்தார்.  ஆனாலும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சுஜாதாதானே?  ஏனென்றால், … Read more

சாரு – அய்யனார் உரையாடல் – அடுத்த பகுதி

”இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திர தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் … Read more