நன்றி

நன்றி என்ற வார்த்தையைக் கேட்பது எனக்கு எப்போதுமே லஜ்ஜையான விஷயம். நன்றி பற்றி சற்று நேரத்துக்கு முன்பு என் நண்பரிடம் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் எதிர்பார்ப்பது நன்றி அல்ல. நன்றி பகர்வது உங்கள் பண்பின் அடையாளம். அவ்வளவுதான். நான் என் தந்தைக்கும் தாய்க்கும் நன்றியா சொன்னேன். அது அல்ல விஷயம். ஆனால் எனக்குக் குழந்தை பிறந்த விஷயத்தை என் தகப்பனுக்கோ உயிர் நண்பனுக்கோ தெரிவிக்க வேண்டியது என் கடமை அல்லவா? … Read more

Huntsman

லக்ஷ்மி சரவணகுமார் தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கருத்து முரண்பாடுகள் அவருக்கும் எனக்கும் நிறைய உண்டு. அநேகமாக எல்லா விஷயங்களிலுமே என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உப்பு நாய்கள் நாவலும் எனக்குப் பிரீதியானது. ஒரே ஒரு ஆபத்துதான். வண்ணதாசன் அவரைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுவார். அப்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்தப் பக்கம் போய் விடாதே என்று லக்ஷ்மியிடம் எச்சரிப்பேன். அவருடைய புத்தக விமர்சன உரையிலும் இதைக் … Read more