கொரோனா சிந்தனைகள் – 2

அஞ்சு மணிக்கு நாமெல்லாம் கை தட்டணும் என்று மோடி சொன்னாரோ?  அதனால் கை பலரும் கை தட்டியிருப்பார்கள்.  நான் தட்டவில்லை.  ஏனென்றால், இந்தியா பைத்தியக்காரர்களின் கூடாரமாக விளங்குகிறது.  வெளியே வராதீர்கள் என்று சொல்லியும் ஒரு நிமிடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வீதம் போகின்றன.  செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரம் பயணிகள் ரயில்கள் ரத்தானதால் தங்க இடமின்றி தங்கியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு சேவை நிறுவனம் உணவு வழங்குகிறது.  இதெல்லாம் மூளை இருப்பவர்கள் செய்கின்ற காரியம்தானா?  ஒருத்தருக்கு ஒருத்தர் நாலஞ்சு … Read more

கொரோனா சிந்தனைகள் – 1

இத்தனை தினங்களாக பெரும் கவலையில் இருந்தேன். நாகேஸ்வர ராவ் பூங்கா மூடப்பட்டு விட்டதால் அங்கே வசித்த பத்து பூனைகளும் எப்படி சாப்பிடும் என்பதே கவலை. அவைகளுக்கு வேட்டையாடத் தெரியாது என்பதால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பார்க்கோ ஒரு மாதம் பூட்டிக் கிடக்கும். ஒரு மாதம் பட்டினி என்றால் சாவுதான். இங்கே உள்ளவர்களோ பிராமணர்கள். அவர்கள் அந்தப் பூனைகளுக்கு காலையும் மாலையும் உணவு கொடுப்பவர்கள். பிராமணர்கள் பொதுவாக சட்டத்தை மீறும் பழக்கம் இல்லாதவர்கள். ரௌத்திரம் பழகாதவர்கள். செக்யூரிட்டியோ இப்போதுதான் … Read more

கேக்

நேற்றைய பதிவைப் படித்தீர்களா?  அதில் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர் – பணத்தையும் நகைகளையும் ஒதுக்கித் தள்ளியவர் – அவரது பிற்காலத்தில் பணத்துக்காக எத்தனை கஷ்டப்பட்டார், வாழ்நாள் பூராவும் சிங்கம் போல் வாழ்ந்தவர் முதிய வயதில் பணத்துக்காக எவ்வளவு சமரசங்களை மேற்கொண்டார் என்பதையெல்லாம் அவரது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.  கேட்டிராதவர்களுக்குக் கூட அவருடைய நேர்காணல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்தே தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அவர் மீது எந்தத் தவறும் இல்லை.  முதுமையில் வறுமை என்பது யாராலும் தாங்க முடியாதது.  ஏனென்றால், இளமையின் வறுமையை … Read more

Necrophilia

பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் எல்லோரும் சண்டைக்கு வருகிறார்கள்.  நான் சொல்ல வந்ததன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் திட்டி எழுதி விட்டேன், திட்டி எழுதி விட்டேன் என்றே அழுது புலம்புகிறார்கள்.  பத்து வயசுப் பொடியனிலிருந்து என்னை விட வயது முதிர்ந்தோர் வரை அதே ரகம்தான்.  ஒரு இருபது வயதுப் பையன் என்னை ஆறு மாதம் கழித்துச் சந்திக்கிறான்.  முதல் வார்த்தை ”எப்டி இருக்கீங்க அங்கிள்” இல்லை.  ”என்னை என்னா திட்டி எழுதியிருக்கீங்க?” என்னுடைய ஒரு எழுத்தைக் கூட படித்ததில்லை.  … Read more

நிரகரிப்பும் தடையும் (9)

அராத்து 16.03.2020 தமிழ் இந்துவில் ராஜன் சாரு நிவேதிதாவைப்பற்றி எழுதியதைத் தொடர்ந்து நான் எழுதியது நேற்று வெளிவந்து இருந்தது. தமிழ் இந்துவுக்கு எழுதி அனுப்பியதற்குப்பின் அந்தக் கட்டுரையில் எனக்குத் தோன்றிய விஷயங்களை இன்னும் சேர்த்துக்கொண்டே போனேன். மொத்தத்தையும் இங்கே ஷேர் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி : தமிழ் இந்து ! ஒரு சடங்கு போல நானும் முதலிலேயே கூறி விடுகிறேன். தமிழ் இந்துவில் வந்த சாரு நிவேதிதாவைப் பற்றிய ராஜனின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. … Read more

A file for Mr. A.K. Arumugam

நண்பர்களை என் வீட்டில் சந்திப்பதில்லை; அவர்களோடு என் வீட்டில் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை; ஃபோனிலும் தொடர்பு கொள்வதில்லை என்பது நான் பின்பற்றும் கடும் விதி. இதை நான் மீறினால் என்ன ஆகும் என்று நண்பர் தக்ஷிணாமூர்த்தியோடு என் வீட்டில் கதைத்தது பற்றி நேற்று எழுதியிருந்தேன். உண்மையில் அது பற்றி ஐம்பது அறுபது எழுபது பக்கம் எழுதலாம். அவ்வளவு மெட்டீரியல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. ஆனால் எந்தத் தவறும் மூர்த்தியின் மீது இல்லை. எனவே அவர் இங்கே வந்து … Read more