கோபி கிருஷ்ணன் சந்திப்பு

சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. சந்திப்புகளை விட கோபி கிருஷ்ணன் சந்திப்பே ஆக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், இதில் பைத்தியத்தன்மை பற்றியும், அதன் வரலாறு பற்றியும், அதற்கும் கலாச்சாரத்துக்கும் உள்ள உறவு பற்றியும், அதற்கும் அதிகாரத்துக்கும் உள்ள எதிர்வு நிலை பற்றியும், பைத்தியத்தன்மையின் வரலாற்றை எழுதுவதில் மிஷல் ஃபூக்கோவின் பங்களிப்பு பற்றியும், இவை எல்லாவற்றுக்கும் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். … Read more

பூச்சி 118: பொய்களின் உலகம்

நான் பயணம் செல்லும் போது தவறாமல் செய்யும் விஷயம், அங்கே உள்ள டான்ஸ் பார்களுக்குச் செல்வது.  குடிக்க அல்ல.  டான்ஸ் ஆட.  உஸ்பெகிஸ்தானில் என்ன காரணத்தினாலோ டான்ஸ் பார் சென்றாலும் நடனங்களில் கலந்து கொள்ளவில்லை.  சீனி எவ்வளவோ வற்புறுத்தினார்.  அந்தப் பெண்களும் வற்புறுத்தினார்கள்.  ஆனால் அந்த இடங்கள் ரொம்பவும் மலினமாக இருந்ததால் நான் என் வசத்திலேயே இல்லை.  எங்கேயோ ஒரு பிச்சைக்கார நாட்டுக்கு வந்து விட்டாற்போல் இருந்தது.  அது வறுமை மட்டும் அல்ல.  கலாச்சார வறுமை.  அருவருப்பாக … Read more

பூச்சி 117 : 13-inch MacBook Air Space Gray

சீனி என்ற அராத்துவிடம் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் – அல்லது பதினைந்து ஆண்டுகளும் இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை – எழுதித் தருகிறேன், நீங்கள் ஒரு காலத்திலும் எழுத்தாளன் ஆக முடியாது என்று சொன்னேன்.  காரணம், அந்தக் காலத்தில் நான் கையால் எழுதிக் கொண்டிருந்தேன்.  அல்லது, கணினிக்கு மாறியிருந்த காலம்.  எழுதுவது என்பது கடும் உடல் உழைப்பைக் கோருகின்ற ஒரு விஷயம்.  சீனியும் கடுமையாக வேலை செய்வார்.  பதினைந்து மணி நேரம் கண் துஞ்சாமல், கொஞ்சம் … Read more

பூச்சி 116 – Toy Boy

(இந்தப் பதிவு முப்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே.  பெரியவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  படித்தால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது.) Toy Boy என்று ஒரு வெப்சீரீஸ்.  வெப்சீரீஸ் பற்றி எழுதுவதில்லை என்று உறுதி எடுத்திருப்பதால் டாய் பாய் பற்றி எழுதவில்லை.  இல்லாவிட்டால் ஒரு ஐம்பது பக்கம் எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள சீரீஸ் அது.  இதன் கதை  Male Strippers-ஐ சுற்றி வருவதால் இரண்டு விஷயங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இந்த ஆண் நடிகர்கள் … Read more