24. நாளும் நேரமும்

அன்புள்ள  சாரு.. உங்கள் மூன்று மணிநேர உரையை இரண்டாகப் பிரித்து இரு நாட்கள் நடத்தலாம் என்ற யோசனை நல்லதல்ல என்பது என் கருத்து ஏன் ? உங்களது எழுத்தும் உங்கள் பேச்சும் அறிமனதுடன் உரையாடுவதை விட அறிமனதில் அறிந்ததை உடைத்து ஆழ்மனதைத் தொடுபவை. அனைத்தையும் மிகவும் அறிவுபூர்வமாகக் கட்டமைக்க முயலும் இந்தப் பைத்தியக்கார உலகில் தாக்குப் பிடிக்க நமக்கு ஒரு madness தேவை என்கிறார் கொர்த்தசார் உங்களது உரை  கல்லூரிப் பேராசிரியர் உரை அன்று.  மனோதத்துவ செயல்பாடு … Read more

23. முன்னோடிகள்

அன்புள்ள சாரு,  நான் மதுரையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கண்டடைந்தேன். உங்களுடைய கட்டுரைகளைப் படித்த பிறகு உங்கள் நாவலை படிக்கலாம் என்று எண்ணி ராஸ லீலா வாங்கினேன். அதை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அது எனக்கு என்றென்றைக்கும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகமானது. ராஸலீலா படித்து உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள், இசை, திரைப்படம் என அனைத்தையும் தேடி பார்த்து படிக்க … Read more

22. முன்னோடிகள்: கோபி கிருஷ்ணன் சந்திப்பு தொடர்கிறது…

நேற்று (29.8.2020) முன்னிரவு எட்டு மணியிலிருந்து பதினோரு மணி வரை கோபி கிருஷ்ணனின் கதைகளுக்குள் நுழையும் முன் மனப்பிறழ்வு பற்றிப் பேசினேன்.  பதினோரு மணி ஆகி விட்டதால் அதற்கு மேல் கேள்வி பதில் நேரம் ஆகி விட்டது.  கோபியின் கதைகளுக்குள் செல்ல முடியவில்லை.  ஆனால் அந்த மூன்று மணி நேரமும் ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்திருக்கும்.  அது பற்றி வந்த சில எதிர்வினைகளை இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.  இந்த எதிர்வினைகள் எனக்கு மிகவும் முக்கியம்.  … Read more