முன்னோடிகள் – 15

To You Through Me என்ற தலைப்பு அழகாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது பிடிக்காது என்பதால் இந்தத் தலைப்பை முன்னோடிகள் என்று மாற்றி விடலாம் என்று பார்க்கிறேன்.  இலக்கிய முன்னோடிகள் என்று ஜெயமோகன் ஒரு பெரிய புத்தகம் (உண்மையில் இங்கே ‘பெரிய’ தேவையில்லை, பழக்க தோஷமாக வந்து விட்டது, மன்னிக்க) எழுதியிருக்கிறார் என்றாலும் அதில் உள்ள முதல் பாதியை அடித்து விட்டு முன்னோடிகள் என்று வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.  இன்று … Read more

சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்: ஆர். அபிலாஷ்

எனது நீண்ட கால நண்பரும், சக எழுத்தாளரும், பெங்களூர் க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான அபிலாஷ் மேற்கண்ட தலைப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு உரையாற்ற இருக்கிறார். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவது அபிலாஷின் ப்ளாகில் எழுதியிருப்பது: http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html நண்பர்களே,சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு … Read more

To You Through Me – 14

நேற்றைய க.நா.சு. உரை இனிதே முடிந்தது.  மூன்று மணி நேரம் நிறுத்தாமல் பேசினேன். நாற்பது பக்கங்களுக்குக் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன்.  அதில் பதினைந்து பக்கங்களைத்தான் உபயோகப்படுத்தினேன்.  அதற்கே மூன்று மணி நேரம்.  காலை ஆறிலிருந்து ஒன்பது மணி வரை.  பிறகு கேள்வி பதில் முக்கால் மணி நேரம்.  மொத்தம் நாற்பது பக்கக் குறிப்புகளையும் உபயோகப்படுத்தியிருந்தால் மதியம் பனிரண்டு ஆகியிருக்கும்.  பேசியிருக்கவும் முடியும் என்றே தோன்றியது.  வாசகர் வட்டச் சந்திப்புகளில் அப்படித்தானே நடக்கும்.  என்ன, பக்கத்தில் ரெமி மார்ட்டின் … Read more

ஜூலை 26 காலை ஆறு மணி: கநாசு பற்றிய உரை

ஞாபகப்படுத்துகிறேன். நாளை காலை ஆறு மணி. இந்திய நேரம். அமெரிக்க நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.Topic: Session with Charu – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்Time: Jul 26, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meetinghttps://zoom.us/j/9205225069?pwd=SHhzUTVwNlNyc3crbjl5TGsvc1VYdz09 Meeting ID: 920 522 5069Passcode: 7Xed4Nவழக்கமான நடைமுறைகள் தான்:1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே … Read more

பூச்சி 110

க.நா.சு.வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது வேறு எதையும் தொடக் கூடாது.  ஆனால் நான் பெருந்தேவியின் கவிதைகளுக்குப் பெரும் ரசிகன்.  ஏற்கனவே பெருந்தேவியின் கவிதை பற்றிப் பலமுறை எழுதியும் இருக்கிறேன்.  இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர் உரைநடையாக எழுதித் தள்ளுகிறார்.  குறுங்கதைகள்.  ஏற்கனவே சில கதைகளைப் படித்து “ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்.  அதனால் இப்போது சில இணைப்புகளை அனுப்பியிருந்தார்.  உடனே அவசர அவசரமாகப் படித்தேன்.  … Read more

ஐயோ பாவம்…

அன்பர் கமல்ஹாசனின் கவிதையை பல நண்பர்கள் அனுப்பியிருந்தனர். பலவிதமான கலவையான உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு மனிதன் எப்படி இந்த அளவு தனிமைப்பட்டுப் போக முடியும் என்று மிக மிக மிக வருத்தமாக இருந்தது. உலகத்தில் உள்ள முக்கியமான புத்தகங்களையெல்லாம் படித்து விட்டு, நான் விஷயமறிந்தவர்கள் என்று நினைக்கும் சிலரே கமல் நம்பமுடியாத அளவுக்கு ஒரு படிப்பாளி என்று சொல்லும்படியான பேர் வாங்கின ஒரு ஆள், இப்படியுமா கவிதை என்ற பெயரில் உளற முடியும்? உளறுவதற்கு ஒரு அளவு … Read more