To You Through Me – 11

அன்புள்ள சாரு, உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து  கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.  முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் … Read more

பூச்சி 91

பூச்சியைத் தொட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி உள்ளது.  இன்று ஒரு நண்பர் நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பினார்.  எல்லாம் என் சக (தமிழ்) எழுத்தாளர்களின் சமீபத்திய நூல்கள்.  ஆஹா, இந்த ஆலோசனைக்கு நான் எத்தனை முறை பதில் எழுதியிருக்கிறேன்?  என்னுடைய பலவீனம் என்னவென்றால், எத்தனை முறை ஒரே ஆலோசனையைச் சொன்னாலும் நானும் சலிக்காமல் ஒரே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பேன்.  ஒரே பதில் என்றாலும் அதன் உள்மடிப்புகள் வேறாகத்தான் இருக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அது … Read more

To You Through Me – 10

லவ்லி சாரு,  உங்களுடைய நகுலன் உரையைக் கேட்க முடிந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கும் சதீஷ்வரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் வாசகர்கள், நண்பர்கள் எல்லாரும் மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்: ஒரு ஆன்மிக அனுபவம் என்றும், ஒரு trance நிலை என்றும். எனக்கும் அதே தான் தோன்றியது.  நேற்று ஒரு விஷயத்தை கவனித்தேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் உதாரணங்கள், reference கொடுத்து பேசும்போது, உங்கள் வாசகர்கள் மின்னல் போல செயல்பட்டு அந்த reference-க்கு உரிய Wikipedia … Read more

To You Through Me – 9

இணைய தளத்தில் இரண்டு தொடர்கள் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  To You Through Me என்ற இந்தத் தொடர்.  மற்றும் பூச்சி.  இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதி இன்று. நேற்றைய நகுலன் உரை நான் எதிர்பார்த்ததை விட உயர்தரமாக அமைந்து விட்டது.  கொஞ்சம் பயந்துகொண்டுதான் இருந்தேன்.  ஏனென்றால், நகுலனின் வாழ்க்கை செல்லப்பாவின் வாழ்க்கையைப் போல் அத்தனை சம்பவங்கள் நிறைந்தது இல்லை.  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனித்த வீட்டில் ஒரே ஒரு பணிப்பெண்ணுடன் எப்போதுமே தனியாக வாழ்ந்த, … Read more

என் புத்தகங்கள் 75 ரூபாய் விலையில்

இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் குரியர் மற்றும் தபால் மூலம் புத்தகங்கள் அனுப்ப முடியாத நிலையில் கிண்டிலில் படிப்பது உசிதம். அதன் காரணமாக என் புத்தகங்கள் கிண்டிலில் 75 ரூ. விலையில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். https://amzn.to/3ia3c9p

நகுலன் சந்திப்பு – எதிர்வினை

இன்றைய நகுலன் உரை தடையில்லாமல், நிறுத்தம் இல்லாமல் இரண்டரை மணி நேரமும் கேள்வி பதிலில் ஒரு மணி நேரமும் போனது. தயார் செய்து வைத்ததில் அறுபது சதமே பேச முடிந்தது. அருணாசலம் சரியாகவே அனுமானித்து விட்டார். இன்றைய பேச்சின் சாரமான இரண்டு அம்சங்கள்: சாருவைப் படிப்பதற்காக சக மனிதர்கள் கிண்டல் செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது? கிரிமினலும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு பேருமே நம்மைக் கடவுளிடம் அனுப்பி வைக்கிறார்கள். கீழே அருணாசலம்: … Read more