என் புத்தகங்கள் 75 ரூபாய் விலையில்

இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் குரியர் மற்றும் தபால் மூலம் புத்தகங்கள் அனுப்ப முடியாத நிலையில் கிண்டிலில் படிப்பது உசிதம். அதன் காரணமாக என் புத்தகங்கள் கிண்டிலில் 75 ரூ. விலையில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். https://amzn.to/3ia3c9p

நகுலன் சந்திப்பு – எதிர்வினை

இன்றைய நகுலன் உரை தடையில்லாமல், நிறுத்தம் இல்லாமல் இரண்டரை மணி நேரமும் கேள்வி பதிலில் ஒரு மணி நேரமும் போனது. தயார் செய்து வைத்ததில் அறுபது சதமே பேச முடிந்தது. அருணாசலம் சரியாகவே அனுமானித்து விட்டார். இன்றைய பேச்சின் சாரமான இரண்டு அம்சங்கள்: சாருவைப் படிப்பதற்காக சக மனிதர்கள் கிண்டல் செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது? கிரிமினலும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு பேருமே நம்மைக் கடவுளிடம் அனுப்பி வைக்கிறார்கள். கீழே அருணாசலம்: … Read more