பூச்சி 110

க.நா.சு.வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது வேறு எதையும் தொடக் கூடாது.  ஆனால் நான் பெருந்தேவியின் கவிதைகளுக்குப் பெரும் ரசிகன்.  ஏற்கனவே பெருந்தேவியின் கவிதை பற்றிப் பலமுறை எழுதியும் இருக்கிறேன்.  இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர் உரைநடையாக எழுதித் தள்ளுகிறார்.  குறுங்கதைகள்.  ஏற்கனவே சில கதைகளைப் படித்து “ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்.  அதனால் இப்போது சில இணைப்புகளை அனுப்பியிருந்தார்.  உடனே அவசர அவசரமாகப் படித்தேன்.  … Read more

ஐயோ பாவம்…

அன்பர் கமல்ஹாசனின் கவிதையை பல நண்பர்கள் அனுப்பியிருந்தனர். பலவிதமான கலவையான உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு மனிதன் எப்படி இந்த அளவு தனிமைப்பட்டுப் போக முடியும் என்று மிக மிக மிக வருத்தமாக இருந்தது. உலகத்தில் உள்ள முக்கியமான புத்தகங்களையெல்லாம் படித்து விட்டு, நான் விஷயமறிந்தவர்கள் என்று நினைக்கும் சிலரே கமல் நம்பமுடியாத அளவுக்கு ஒரு படிப்பாளி என்று சொல்லும்படியான பேர் வாங்கின ஒரு ஆள், இப்படியுமா கவிதை என்ற பெயரில் உளற முடியும்? உளறுவதற்கு ஒரு அளவு … Read more