பூச்சி – 119

அன்புள்ள சாரு, ‘என்ன இன்னும் பதில் வரவில்லையே’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் பூச்சி கட்டுரையிலேயே என் கடிதத்தை பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உண்மைதான். நான் புத்தகங்கள் வாங்கும் முன் பல மதிப்புரைகளைப் படித்து விட்டுத் தான் வாங்குவேன்.  (இது சரியான முறையா என்று தெரியவில்லை.) அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டு பிடித்தேன். ஒரு புத்தகம் வாங்கும் முன் அவர்கள் தளத்தில் அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் … Read more

முன்னோடிகள் – 19

கோபி கிருஷ்ணன் உரைக்காக முழுமூச்சில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  கோபி கிருஷ்ணனை அல்ல.  அவரை ஏற்கனவே பலமுறை படித்து விட்டேன். வெறுமனே புரட்டினால் போதும்.  நான் படிப்பது, இப்போதைய என் பேச்சு ஒரு ஒப்பீட்டு ஆய்வு போல் இருக்கும்.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பேச்சைத் தவற விடாதீர்கள்.  முக்கியமான Gerard de Nerval மற்றும் Arthur Rimbaud.  இவர்கள் பெயரை ஷெரார் தெ நெர்வால் என்றும் ஆர்த்தர் ரேம்போ என்றும் உச்சரிக்க வேண்டும்.  … Read more