பூச்சி 120: வரும் போகும்

என் நண்பர்கள் இருவர் ஃப்ரெஞ்ச் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நான் வழக்கம்போல் பாதியில் விட்டு விட்டேன்.  பாதியில் அல்ல; ஆரம்பத்திலேயே.  நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஃப்ரெஞ்சை விட அது முக்கியம்.  ஃப்ரெஞ்சில் இறங்கினால் தினம் இரண்டு மணி நேரம் வீட்டுப் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும்.  தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்காவிட்டால் ஃப்ரெஞ்ச் அல்ல, எதுவுமே வராது.  அதனால்தான் பெண்களிடமிருந்தும், பூனைகளிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறேன்.  ஆனால் நடைப் பயிற்சியின் போது முழுக்க முழுக்க ஃப்ரெஞ்ச் … Read more

முன்னோடிகள் – 20

அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படிக்கும் போது இந்தக் கேள்வி உதித்தது: கோபியின் பல கதைகள் ஒரு பதிவைப் போல உள்ளது. அதாவது கதை என்கிற வடிவில் இல்லை. நம் தமிழ்நாட்டில் வரலாறு என்பதையே இப்படி இலக்கிய வடிவில்தான் அறிகிறோம். பண்டைய தமிழ் நாகரீகம் எப்படி இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களிலும் இதர இலக்கியக்கியங்களிலும்தான் பார்க்கிறோம். ஆனால் மேற்கு நாடுகளில் அப்படியில்லை. கலங்கரைவிளக்கம் ஒன்று ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை வடிவமைத்தவர், கட்டிய … Read more

அடியேனைப் பற்றி அராத்து

என்னைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே ஆகச் சிறந்தது: சாருவும் பொய்யும் இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான போஸ்ட்தான். கவனமாகப் படிக்கவும். சாருவே தான் பொய் சொல்வதாகச் சொல்லப்படுவதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் அது தப்பு. அவருக்கு அவரைப் பற்றி தெரியாது. யாருக்குத்தான் யாரைப்பற்றி தெரிகிறது சாருவுக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையும் சொல்லத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதா ? அவர் டிக்‌ஷனரியில் உண்மை , பொய் என்ற பூலியன் அல்ஜீப்ரா கிடையாது. அது வேறு மாதிரி செயல்படும். … Read more