சத்திய சோதனை – 1

ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன.  என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை.  அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை.  அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது.  அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை.

மோ.க. காந்தி

சத்திய சோதனைக்கு எழுதிய முன்னுரையில்.

சபர்மதி ஆசிரமம்.

26 நவம்பர் 1925