150. தீண்டாமை

”ம்யூசிக்லாம் எங்க ஏரியால்ல, அங்கெ எப்டி நீ வர்லாம்?  ஏற்கனவே உனக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லேங்கறேன், இதுல ம்யூசிக் வேறயா?  அதும் கருணாமிருத சாகரம்?  டேய், இவன வுட்டா எங்கிங்கியோ போய்டுவான் போலருக்கே?” என்று ஒரு குரல் கேட்கிறது.  முகநூலில் எழுதியது போதாது என்று எல்லோருக்கும் வாட்ஸப்பிலும் அனுப்பியிருக்கிறது.  விஷயம் என்ன தெரியுமா? கருணாமிருத சாகரம் வெளியானது 1917.  அதில் உள்ள கண்டுபிடிப்புகளோடு மகா வைத்தியநாத சிவன் முரண்பட்டார் என்று சொல்லி விட்டேன் அல்லவா?  சிவன் இறந்தது … Read more

149. எஸ்.ரா., ஜெயமோகன், சாரு நிவேதிதா

நான் தில்லியில் இருந்த 1978-1990 கால கட்டத்தில் பல அரிதான நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவற்றைப் பற்றி அவ்வப்போது விரிவாக எழுதியும் இருக்கிறேன்.  கலைகளிலேயே ஆக இளமையானதும், எல்லா கலைகளின் சாத்தியப்பாடுகளையும் தன்னில் உள்வாங்கிக் கொண்டதுமான சினிமாதான் மக்கள் மனதை மிகவும் ஈர்க்கக்கூடியது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு.  கலைகளிலேயே மக்கள் மனதை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடியது நாடகம்தான் என்பது என் கருத்து.  நாடகம் என்பது ஒரு சிறிய … Read more

148. கமலுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னை உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும்.  அது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை.  எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்குமா என்ன?  ஆனாலும் உங்களைப் பின்பற்றும் தமிழர் ஏராளமானோர் என்பதால் அவ்வப்போது உங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறேன்.  நீங்களும் என்னை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் என் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை உடனுக்குடன் கவனிக்கிறேன்.  உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு அந்தத் தலைப்புக்கு முன்னால் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு வைத்திருந்தீர்கள்.  அது அந்தக் கதைக்கு ஒத்தே வராது என்று … Read more

147. தமிழகமும் கேரளமும்…

எழுத்தாளனும் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் ரசிகனும் ஒன்று அல்ல; எழுத்தாளன் உணர்ச்சிவசப்படுகின்றவன்தான் என்றாலும் அவன் ஒரு புத்திஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கனத்த இதயத்துடன்… கட்டுரைகளின் சாரம்.  அதை எழுத்தாளர்களே புரிந்து கொள்ளாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.  அவர்களுக்குப் புரியவில்லையே என்பதற்காக நான் அதையெல்லாம் எழுதாமலும் இருக்க முடியாது.  இந்த துக்கமெல்லாம் அடங்கினதும் எழுதலாமே என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், யேசு அப்படிச் செய்யவில்லை.  வேதாகமத்தின் மத்தேயுவில் 16: 21-28 வசனங்களைப் பாருங்கள். … Read more

146. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மாபெரும் விலைகுறைப்பும் புத்தனாக வாழ்தலும்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் மாபெரும் விலைகுறைப்பு நேற்றோடு முடிவுக்கு வருவதாக இருந்தது.  அதனால் ராம்ஜியோடு பேசினேன்.  அக்டோபர் ஐந்து வரை இந்தப் பெரும் விலைகுறைப்பை நீட்டிக்க முடியுமா என்று கேட்டேன்.  அவரும் உடனடியாகச் சம்மதித்தார்.  உடனே என் தளத்தில் அறிவிக்கிறேன் என்றேன்.  ஆனால் அறிவிக்க மறந்து விட்டேன்.  காரணம், நான் என்ன எழுதுகிறேனோ அதைக் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.  இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  கோட்ஸேயாக வாழ முடியாது.  ஆனால் காந்தியாக வாழ்ந்தால் … Read more

லேப்டாப் நரசிம்மனுக்கு ஒரு கேள்வி

நீ என்னை நேரில் பேசுவது போலவே வா போ என்று உரிமையில் பேசியிருப்பதால் நானும் உன்னை ஒருமையில் பேச அனுமதிப்பாய் என்று நினைக்கிறேன். இப்போது கடும் நெஞ்சு வலியுடன் இதை எழுதுகிறேன். நெஞ்சுவலி முற்றி ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால் என் நண்பர் எக்ஸ்தான் காரணம். ஏனென்றால், அவர்தான் நீ முகநூலில் வாந்தி எடுத்ததைப் பற்றி எனக்குச் சொன்னவர். மற்றபடி ஒரு நீண்டநாள் மனநோயாளியாகிய நீ எழுதிய எதையும் நான் படிப்பதில்லை என்பது உனக்கே தெரியும். … Read more