விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ? அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. லட்டு தின்ன ஆசையா ரசிக்கும் தமிழர்கள் இதை ரசிப்பார்களா என்று தெரியவில்லை.  கமலின் DTH திட்டம் ஒரு புரட்சிகரமான ஆரம்பம் என்று … Read more

புத்தக விழா

இன்று மதியம் ஒரு மணியிலிருந்து ஒன்றரை வரை கேப்டன் டிவியில் சென்னை புத்தக விழா பற்றி நடக்கும் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.

ஒரு சவால்

நான் எழுதும் புத்தகங்களை அவசியம் ஏற்பட்டால் ஒழிய திரும்பப் படிப்பதில்லை.  சமீபத்தில் ஷாப் ஹாஸ்னி பற்றிய குறிப்புகளை எடுப்பதற்காக கலகம் காதல் இசை என்ற புத்தகத்தைப் புரட்டினேன்.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாத்ரு பூமி என்ற மலையாளப் பத்திரிகையில் தொடராக எழுதியவை அக்கட்டுரைகள்.  சர்வதேச அளவில் இசை என்ற வடிவம் எப்படி எப்படியெல்லாம் வேறுபட்டு உள்ளது என்பதையும் சர்வதேச இசையின் பல்வேறு பரிமாணங்களையும் மிக விரிவாக ஆய்வு செய்யும் பல கட்டுரைகள் அந்நூலில் உள்ளன.  லத்தீன் அமெரிக்க … Read more

இன்றைய நிகழ்ச்சி

இன்று இரவு 8.10 இலிருந்து 9 மணி வரை தந்தி டிவியில் ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.  முடிந்தவர்கள் பார்க்கவும்.  தலைப்பு: தமிழர் பண்பாடு

ஒரு உரையாடல்

  http://www.pichaikaaran.com/2013/01/blog-post_3381.html எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.  நான் இதுவரை கரும்பு சாப்பிட்டதில்லை.  அதைக் கடிப்பதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டும் என்பதே காரணம்.  தெருமுனையில் காசு கொடுத்தால் நோகாமல் கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.  தண்ணீரே கலக்காமல் வெறும் கரும்புச் சாறே வாங்கி கொஞ்சம் எலுமிச்சை கலந்து குடித்தால் மஜாவாக இருக்கும்.  ஆனாலும் எனக்குக் கரும்பு அவ்வளவு இஷ்டமில்லைதான். கரும்பு சாப்பிட அலுப்புப் படுகிறேன் என்பதால் அம்மா என்  சின்ன வயதில் கரும்பை அரிவாள்மனையில் வைத்துத் தோல் சீவி, சின்ன … Read more