கடவுளிடம் கேட்க எதுவுமில்லை…
ஒருவழியாக வீடு கிடைத்து விட்டது. அடையார் காந்தி நகர். அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில். நான் இப்போது கோவிலுக்குச் செல்வதில்லை. அந்த நேரத்தில் கூட எழுதலாம் என்ற ஒரே காரணம்தான். கோவிலுக்கு எதற்காகச் செல்கிறோம்? இறை சக்தியிடம் வேண்டிக் கொள்வதற்காக. பிரார்த்தனை செய்து கொள்வதற்காக. எனக்குத்தான் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லையே? ம்ஹும். எனக்கு புக்கர் பரிசு வேண்டும்தான். அதுகூட எதற்கு என்றால் என் எழுத்து ஆங்கில இலக்கிய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான். … Read more