the outsider (11)

என் சக தமிழ் எழுத்தாளர்கள் பலரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டேன்.  விருது ஏற்புரையும் அதில் ஒன்று. அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால், ஏதோ ஒரு சந்தர்ப்பவசத்தினால்தான் நான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.  மற்றபடி இந்த இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதை அந்த எழுத்தாளர்களின் பேச்சின் போது என் மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ந்தேன்.  என்னால் என்னுடைய ஊரில் ஓடும் நதியை என் நதியெனக் கொள்ள முடியவில்லை.  இத்தனைக்கும் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற … Read more

தீண்டாமை

என் நண்பர் சமஸ் எடுத்த பேட்டிகளிலேயே என்னை ஆகக் கவர்ந்தது கருணாநிதியின் இறுதிப் பேட்டிதான்.  தொண்ணூறு வயதுக்கு மேல் கொடுத்த பேட்டி என்பதால் அதுவே அவரது இறுதிப் பேட்டியாக அமைந்தது.  எனக்கும் கருணாநிதிக்கும் நான் பல ஒற்றுமைகளைக் கண்டதுண்டு.  ஒருசில ஒற்றுமைகள் பற்றி நான் வெளியே சொல்ல முடியாது.  ஆனால் பலதை சொல்லலாம்.  கிண்டல், நக்கல், சிலேடை, எத்தனை மணிக்கு உறங்கினாலும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்வது, சுறுசுறுப்பு, எல்லோரிடமும் சமமாகப் பழகுதல், இத்தியாதி.  ஒரே … Read more

ராதிகா சாந்தவனம்

தஞ்சாவூர் ராஜா ப்ரதாப் சிங்கின் போக பத்னியாக விளங்கிய தெலுங்குக் கவியான முத்துப்பழனி (1730 – 1790) எழுதிய ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்கு நூலை எனக்கு அர்த்தத்துடன் அல்லது அர்த்தம் தவிர்த்துப் படித்துக் காட்டக் கூடிய நண்பர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். புத்தகம் என்னிடம் உள்ளது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் தியாகராஜா நாவலுக்கு இது தேவைப்படுகிறது. charu.nivedita.india@gmail.com

ஆனி எர்னோ

நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்த தோழியிடமிருந்து வந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு ஃபோன் செய்து கேட்ட போது ஃப்ரீக் கால் என்றாள். 2. ஆனி எர்னோவின் நாவல் ஒன்றின் முதல் அத்தியாயம் அச்சு அசலாக ஸீரோ டிகிரியின் முதல் அத்தியாயம் போலவே இருக்கிறதாம். ஆனால் அது பற்றி நான் ஒன்றும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஆனி எர்னோவின் அந்த நாவல் 1960களிலேயே வந்து விட்டதாம். 3. அபிலாஷ் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த ஆனி எர்னோவின் இரண்டு … Read more

ராஜராஜ சோழன் இந்துவா?

இந்து என்ற பெயர் விவகாரம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  சிந்துவை அரபி மொழி பேசுபவர்கள் ஹிந்து என்று அழைத்தார்கள்.  சிந்து நதியைத் தாண்டி – அதாவது, அரபிகளின் பார்வையில் – வாழ்பவர்கள் ஹிந்துக்கள்.  ஆக அராபிய முஸ்லிம்கள் வைத்த பெயரே ஹிந்து.  அதற்காக, அதற்கு முன்னால் ஹிந்து மதமே இல்லை என்று சொல்வது மட்டித்தனத்தைத் தவிர வேறு இல்லை.  ஆப்பிளுக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்காதிருந்தால் ஆப்பிளே இல்லை என்று சொல்லும் மட்டித்தனம்தான் ராஜராஜன் இந்து இல்லை … Read more