கடவுளைக் காண வேண்டுமா, இதோ…

நான் கிறித்தவம் பற்றி அடிக்கடி வெறுப்போடு எழுதுவதாக சில நண்பர்கள் கடிதம் எழுதுவதுண்டு.  நான் மதமாற்றக் கிறித்தவத்துக்கு மட்டுமே எதிர்.  எந்த மதத்திலிருந்தும் எந்த மதத்துக்கும் மாறுவது எனக்கு உடன்பாடானதல்ல.  அது கூட என் தனிப்பட்ட கருத்துதான்.  மதமாற்றம் என்பது சொந்த விருப்பத்தில் அமையாமல் தூண்டுதலின் காரணமாக அமைந்து விடுகிறது என்பதே காரணம்.  மற்றபடி நான் யேசு கிறிஸ்துவின் அடிப்படைகளுக்கும் கிறித்தவத்தின் ஆன்மீகத்துக்கும் எப்போதுமே விசுவாசியாக இருப்பவன்.  மேலே உள்ள இணைப்புகளில் மூன்றாவதாக உள்ளதை முழுமையாகக் கேளுங்கள்.  … Read more

அல்லாஹு அக்பர்…

இந்தப் பாடலை ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நண்பர் சொன்னார், ”கடைசியில் கேட்பதை நிறுத்தி விட்டேன். இன்னொரு முறை கேட்டால் முஸ்லீமாக மாறி விடுவேன்.” என்ன ஆச்சரியம் என்றால், இன்னொரு நண்பருக்கும் அனுப்பினேன். அவரும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.

ஒரு பதில்…

டியர் சாரு நீங்க  கம்னாட்டி  ஜெயமோகன் என எழுதியதைபார்த்து  ஏன் இப்படி எழுத வந்தது என வியப்புவேதனை  சரியில்லை இதைப்போல எழுதுவதுஎன  தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன் ஆரா என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான … Read more

முந்நூறுக்குள் ஒரு கதை

67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது.  அதாவது, சென்ற ஆண்டு வரை.  சத்தியம்.  இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது.  ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி.  எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அது வேறு ஏரியா.  இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா.  அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள்.  ஆனால் பெருந்தேவி … Read more

ArtReviewவில் அடியேன் கட்டுரை

ArtReview Asiaவிலும் ArtReview-விலுமாக கடந்த நாலு ஆண்டுகளாக நான் Notes from Madras என்ற தலைப்பில் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கான பத்திரிகை. நான் மட்டுமே அதில் தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய பல்வேறு விஷயங்களை எழுதி வருகிறேன். பொதுவாக இப்படி வெளியே போய் எழுதுபவர்கள் மேற்கத்தியர்களுக்குத் தோதாக இந்தியாவைத் திட்டி எழுதுவது வழக்கம். நான் இந்தியாவைத் திட்டி எழுதுவேன், ஆனால் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் அல்ல. இங்கே … Read more

ஓர் உலகத் தரமான சிறுகதை

சமீபத்தில் நான் படித்த, மறக்கவே முடியாத ஓர் உலகத் தரமான சிறுகதை இது. சுஷில்குமாரின் தொகுப்பை விரைவில் படிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.