சித்த மருத்துவம்

சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் யோகமும் இந்தியா இந்த உலகுக்கு வழங்கிய கொடைகள். இதில் யோகா உலகப் புகழ் பெற்று விட்டது. ஒரு ஜெர்மானிய வெப்சீரீஸில் கூட ஒரு பதின்பருவச் சிறுமி தன் தந்தையிடம் யோகா வகுப்பு போவதற்குக் காசு கொடுங்கள் என்று கேட்கும் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் மவுசு இல்லை. அது வேறு விஷயம். ஆயுர்வேதம் ஓரளவு பிரபலமாகி இருக்கிறது. ஆனால் சித்த மருத்துவம் பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஈரோடு பக்கத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பாரம்பரிய … Read more

மருத்துவர்கள் இல்லாத உலகம்

போலீஸே இல்லாத ஒரு சமூகம் – அதே சமயம், அது குற்றங்களும் இல்லாத சமூகமாக இருந்தால் அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட சமூகங்களும் இந்த பூமியில் இருக்கின்றன.  Liechtenstein என்ற மத்திய ஐரோப்பிய நாட்டில் போலீஸ் கிடையாது.  ராணுவமும் கிடையாது.  மக்கள் தொகை 40000.  அதேபோல் பல ஐரோப்பிய நாடுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் கம்மி.  இந்தியாவில் – அதுவும் தமிழ்நாட்டில் ஒரு தெருவுக்கு இரண்டு அலோபதி மருந்துக் கடைகள் இருக்கின்றன.  … Read more

கிளர்ச்சிக்காரனின் கூச்சல்

ஆர்த்தோவின் நாடகத்தை சுமார் ஐம்பது பேர் வாசித்து விட்டார்கள். பொதுவாக எல்லோருக்குமே நாடகம் என்ற வடிவம் புதிதுதான். இருந்தாலும் நாடகத்தை எல்லோரும் ரசித்திருக்கிறார்கள் என்றே அவர்களின் கடிதங்களிலிருந்து தெரிகிறது. ஒருசிலர் நாடகத்தில் உரையாடல் அதிகம் இருப்பதாக அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு நாடகங்களை சிபாரிசு செய்கிறேன். ஏற்கனவே எழுதியதுதான். ஆனால் யாரும் பார்க்கவில்லை. ஆர்த்தோ எழுதிய To have done with the judgement of god என்ற வானொலி நாடகம். அந்த நாடகத்தை ஆர்த்தோவே … Read more

ஒரு திருத்தம்

நாடகத்தின் அங்கம் 2 காட்சி 2இல் வரும் Charlemagne என்ற பெயரில் “r” என்ற எழுத்து விடுபட்டிருக்கிறது. அதேபோல் அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு ஷார்ல்மான்ய. சார்லிமேன் அல்ல. ஏதோ ஒரு வேகத்தில் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். உச்சரிப்பு விஷயத்தில் இப்படி நடந்ததே இல்லை. ஆனால் St Patrickஇன் பெயரை ஐரிஷ்காரர்கள் பேட்ரிக் என்றும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் பாத்ரிக் என்றும்தான் உச்சரிப்பார்கள். அதனால்தான் நாடகத்தில் வரும் ஐரிஷ் பாதிரிகள் பேட்ரிக் என்றும் ஆர்த்தோ பாத்ரிக் என்றும் பேசுகிறார்கள். அதனால் … Read more

வெறியாட்டம்

சில நண்பர்கள் ஆர்த்தோ நாடகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லை. இதைப் படித்தவுடன் அனுப்பி வையுங்கள். *** வணக்கம் சாரு, இதுவரை  உங்களுடைய அ-புனைவுகளைப்  படித்துக் கொண்டிருந்த நான் இப்பொழுதுதான் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  “அன்பு” நாவல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதலில் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் வாசித்தேன்.  பின்னர் “நேநோ” தொகுப்பில் சில சிறுகதைகள், ஸீரோ டிகிரி, இப்பொழுது எக்ஸைல்.  ஒரு மாத காலமாக உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கிக் கிடக்கிறேன்.  எல்லாமே … Read more

ஆர்த்தோவின் குரலும் கலையின் கூச்சலும்

சிங்கப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் அகஸ்தோ போவால் போன்ற உலகப் புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களிடம் நாடகம் பயின்றவர். அக்னிக் கூத்து அமைப்பின் இயக்குனர். நாடகாசிரியர். நாடக இயக்குனர். ”அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நாடகம் பற்றி அவர் எழுதியிருந்த கடிதத்தை நாடகம் பற்றிய மூவரின் கருத்துரைகளில் சேர்த்திருக்கிறேன். மற்ற இருவர் ஜெயமோகன், அ. ராமசாமி. இன்று என் நண்பர்கள் முப்பது பேருக்கு நாடகத்தின் பிடிஎஃப் பிரதியை அனுப்பி வைத்தேன். இன்றும் இளங்கோவன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். … Read more