கோவா நடனம்

நாளை என்னுடைய தளத்தில் கோவா நடனம் என்ற நெடுங்கதை வெளியாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நெடுங்கதை. சீனி படித்து விட்டு சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார். கொக்கரக்கோவின் அட்டகாசம், வினித்தின் ரகளை, ஷ்ரேயா என்ற புதிய பாத்திரம் எல்லாம் சேர்ந்த அதகளம்.

குடை வேண்டுமா?

இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.  காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை.  இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா?  அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன்.  அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை.  இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் … Read more

ஆர்த்தோவும் சார்த்தரும் (திருத்தப்பட்டது)

அந்தோனின் ஆர்த்தோ பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சார்த்தர் பற்றியும் ஞாபகம் வரும்.  ஆர்த்தோவின் காலம் 1896 – 1948.  சார்த்தரின் காலம் 1905 – 1980.  ஆர்த்தோவை விட சார்த்தர் ஒன்பது வயது இளையவர்.  இரண்டு பேரும் சம காலத்தவர்கள்.  சார்த்தர் ஃப்ரான்ஸின் ஹீரோ.  நோபல் பரிசையே மறுத்தவர்.  ஆர்த்தோ வில்லன்.  ஃப்ரான்ஸ் தன்னுடைய வில்லனை என்ன பாடு படுத்தியது என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.  ஆர்த்தோ- சார்த்தர் இருவரின் எதிர்முரண் பற்றி யோசிக்கும்போது … Read more

பெங்களூரு, கூர்க், ஸ்ரீரங்கப்பட்டணம்

கடந்த நான்கு நாட்களாக ஒரு முக்கியமான, மிக அவசரமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் விவரத்தை அக்டோபர் இறுதியில் அறிவிப்பேன். இதற்கிடையிலேயே ஒரு நீண்ட சிறுகதை எழுதினேன். அதில் கொக்கரக்கோவின் பெயரை மிஸ்டர் மாற்றுக் கருத்து என்று மாற்றி விட்டேன். எதைச் சொன்னாலும் மாற்றுக் கருத்தை மேஜையில் வைத்துக் கொண்டிருந்தான் கொக்கரக்கோ. அதனால் இந்தப் பெயர் மாற்றம். நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் பெண்களின் கூந்தல் மணம் பற்றி விவாதம் வந்தது போல் எனக்கும் மிஸ்டர் மாற்றுக் கருத்துவுக்கும் ஒரு விவாதம் … Read more

கோயம்பத்தூர் புத்தக விழா

கோயம்பத்தூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அரங்கம் எண்: 239, 240, 265, 266. ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.