காலை ஐந்தேகால் மணிக்கு என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார் பிரபு காளிதாஸ்.
நான் படுத்தவுடனேயே சவத்தைப் போல் தூங்கி விடுவேன். ஆனால் நேற்று இரவு இரண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. இது என் வாழ்வில் புதிய அனுபவம். எனக்கு வந்த ஒரு வாட்ஸப் மெஸேஜ் காரணம். என்னைச் சேர்ந்த எல்லோருமே என்னிடம் மூர்க்கமாகப் பழகத் தொடங்கி விடுவதால் அது எனக்கு ஆச்சரியமில்லை எனினும் அந்த மெஸேஜ் என்னை வெகுவாக பாதித்து விட்டதால் உறக்கம் வரவில்லை. காலையில் புகைப்படத்துக்கு முகம் சரியாக இருக்காதே என்ற கவலை பிடித்துக்கொண்டது.
நாலேகால் மணிக்கு எழுந்த போது கண் திகுதிகுவென்று எரிந்தது. முகமும் மனமும் சரியான நிலையில் இல்லை.
ஐந்து மணிக்கு பிரபு காளிதாஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு. சரியாக ஐந்து பத்துக்கு வந்தார் பிரபு.
ஏழு மணி வரை மெரீனா பீச்சில் புகைப்பட நிகழ்வு. அதன் பிறகு வீட்டில் வந்து ஒரு மணி நேரம் டெட்டியுடன்.
எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலும் உறக்கமின்மையும் புகைப்படத்தில் தெரியவில்லை என்பதைக் கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டது. சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் கவிதைத் தொகுப்புக்கு புகைப்படம் தயார். அந்தப் புகைப்படம் புத்தகம் வரும்போது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன் ஒன்றிரண்டு புகைப்படங்களை வாசகர்ளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பிரபு காளிதாஸ் விரும்பினார். அதனால் சில புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறேன். சுமார் இருநூறு புகைப்படங்கள். ஒவ்வொன்றும் அரிய கலைப்படைப்பு. பிரபு காளிதாஸுக்கு என் நன்றி. இனிமேல் ஒரு புகைப்பட செஷன் இருக்குமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அது பிரபு காளிதாஸுடன் மட்டுமே இருக்கும் என்று இந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது முடிவு செய்தேன்.




பிரபு காளிதாஸின் தொலைபேசி எண்: 98402 37858