படித்ததில் பிடித்தது
என் மாணவர்களில் ஒருவரான நிர்மல் எழுதும் தமிழில் நிறைய பிழைகள் இருந்தாலும் இவரது ப்ளாக் நன்றாக இருக்கிறது. http://nirmalcb.blogspot.in/
என் மாணவர்களில் ஒருவரான நிர்மல் எழுதும் தமிழில் நிறைய பிழைகள் இருந்தாலும் இவரது ப்ளாக் நன்றாக இருக்கிறது. http://nirmalcb.blogspot.in/
ஜனவரி 4 அன்றைய விழாவில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். ஏதோ சஸ்பென்ஸுக்காக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். உங்களை ஏமாற்ற மாட்டேன். எக்ஸைல் – 2 என்ற என்னுடைய நாவல் பற்றிய அறிவிப்பும் இல்லை. அதை நான் சாருஆன்லைனிலேயே எழுதி விட்டேன். இது வேறு. இந்த அறிவிப்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு தீவிரமான பாதிப்பைச் செலுத்தும். இப்போதைக்கு இது போதும். விழாவில் பேசும் போது விபரம் தெரிவிக்கிறேன்.
இன்று முகநூலில் சற்று நேரம் மேய்ந்து கொண்டிருந்த போது Thsuh Ba என்ற நண்பர் அறிமுகப்படுத்தியிருந்த Miley Cyrus என்ற இந்தப் பாடகியைக் கேட்டேன். அற்புதம். குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு. ரிஹானாவுக்குப் பிறகு இவ்வளவு வசீகரமான குரலை இப்போதுதான் கேட்கிறேன். சமீபத்தில் இவர் உள்ளாடையோடு (மட்டும்) கரமைதுனம் செய்வது போன்ற பாவனைகளோடு கூடிய பாடல் ஒன்று வெளியே கசிந்து விட்டதாக அறிகிறேன். இன்னொரு வெர்ஷனையும் தருகிறேன். http://www.youtube.com/watch?v=-YICuUtkjlg
Dear Charu, A book fair without any of your books isn’t any interesting. Let this be the last fair without any of your releases . Waiting for Exile 2 eagerly… என்று என் தோழியிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. எக்ஸைல் ஆங்கில மொழிபெயர்ப்பு தாமதமாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் எக்ஸைல்-2 ஐ தமிழிலேயே வெளியிட்டு விடலாமா என்று நான் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் … Read more
தலைமுறைகள் பார்த்தேன். காவியம். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம். விரிவான விமர்சனம் (சிறிய கட்டுரைதான்) ஒன்றாம் தேதி கடைகளில் கிடைக்கும்…
வாசகர்கள் கவனத்திற்கு, உங்களை மிகக் கவர்ந்த சாருவின் புத்தகம், நாவல், கட்டுரை அல்லது வலைப்பதிவில் அவர் எழுதிய கட்டுரை ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து உங்கள் கருத்துக்களை எழுத வாருங்கள். இதை பேஸ்புக்கில் அல்லது பிளாக்கில் செய்கிறீர்கள் என்றாலும்… இப்போது புதிதாக, இதை ஒரு போட்டியாக அல்லது முக்கிய நிகழ்வில் பங்கேற்பதாக கருதி செய்யலாம். என்ன முக்கிய நிகழ்வு என்றால்….. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக அச்சில் வரும். முதல் மூன்று தேர்வுகளுக்கு பரிசுகள் உண்டு. பரிசுகள் தாண்டியும் … Read more