மயன் மாளிகை
எக்ஸைல் 2-இல் வெற்றி அடைந்து விட்டேன். அதாவது, எக்ஸைல் 2-இன் பிரதியை அராத்து, கணேஷ் அன்பு, கார்த்திக் மூவரிடமும் கொடுத்திருந்தேன் அல்லவா? மூவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி சொன்னார்கள்… நாவல் நன்றாக இல்லை. இதையே பலவிதமாக சுவாரசியமான முறையில் மாற்றி மாற்றி சொன்னார்கள். கணேஷ் சொன்னார். பாட்சா படத்தைப் பார்த்து விட்டு, தலைவரிடமிருந்து இன்னொரு பாட்சா வரும் என்று பார்த்த போது பாபா வந்ததைப் போல் இருக்கிறது. அராத்து சொன்னார். அருமையான பொங்கல் கொடுக்கிறீர்கள். சாப்பிட்டேன். … Read more