தானாச்சூலி

சில வட இந்திய நண்பர்களின் அழைப்புக்கு இணங்க நவம்பர் 3 இலிருந்து 7 வரை உத்தர்காண்டில் உள்ள Dhanachuli என்ற கிராமத்தில் தங்க இருக்கிறேன்.  மொத்தம் 223 வீடுகள்.  அதுவும் ஒவ்வொரு மலையிலும் ஐந்தாறு வீடுகள் என்ற அளவில் விலகி விலகி இருக்கும் போல் தெரிகிறது.  மொத்த ஜனத்தொகை 1310.  எக்கச்சக்கமான பழத் தோட்டங்களும் உருளைக் கிழங்குப் பயிர்களும் நிரம்பிய இடம்.  தானாச்சூலியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் முக்தேஷ்வர் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது.   நைனிட்டால், … Read more

அனுஷ்கா பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலே கண்டுள்ள கேள்விக்கு என்ன பாடுபட்டாவது சரியான பதிலைச் சொல்லி விட வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சி செய்து என் பதிலைச் சொன்னேன்.  அவ்வளவு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகும் சொதப்பி விட்டேன் என்று அந்திமழை ஆசிரியர் போன் செய்து சொன்னார்.  வேண்டுமானால் அந்தக் கேள்வியையும் அதற்கு நீங்கள் சொதப்பியிருக்கும் பதிலையும் நீக்கி விடவா என்று அன்புடன் கேட்டார்.  சே, சே, அதெல்லாம் வேண்டாம்.  நீங்களே ஒரு விளக்கத்தைப் போட்டு வெளியிட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதோ … Read more

நீதி தேவதைக்கே அநீதியா? கடவுளை மனிதன் தண்டிக்க முடியுமா?

ஜெயலலிதா கைது, சிறைத் தண்டனை போன்றவை குறித்து வாசகர்கள் பலரும் கேள்விகளை அனுப்பியிருக்கிறார்கள்.  அதற்கான பதிலை ஸ்வராஜ்யா பத்திரிகையில் நேற்று எழுதியிருக்கிறேன்.  நேற்று தி இந்து தமிழ்ப் பதிப்பிலும் ஓரிரு வாசகங்கள் சொல்லியிருக்கிறேன். இப்போது எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் ரஜினிகாந்த் பிஜேபியில் சேர்ந்து தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தைத் தீர்ப்பார் என்று தெரிகிறது.  செய்வார் என்று நம்புகிறேன். பின்வருவது ஸ்வராஜ்யா கட்டுரை: http://swarajyamag.com/featured/the-angel-of-justice-in-jail/