என்னுடைய நாவல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில்…

சமீப காலமாக என்னை வாசிக்க ஆரம்பித்திருக்கும் பலருக்கும் என் நாவல்களில் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் என் கட்டுரைத் தொகுப்புகளையே படித்திருக்கிறார்கள். இப்போது ஸீரோ டிகிரியின் எழுத்து பிரசுரத்தில் என்னுடைய எல்லா நாவல்களும் சேர்த்து 1499 ரூ. விலையில் கிடைக்கிறது. 34 சதவிகிதத் தள்ளுபடியில். இதை யாவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

162. இந்தியா பற்றி சில நல்ல வார்த்தைகள்…

வரும் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1, இந்திய நேரம் காலை ஆறு மணி) புதுமைப்பித்தன் பற்றிய என் உரைக்குத் தயாராகுங்கள்.  புதுமைப்பித்தனின் கதைகள் இணையத்திலும் கிடைக்கும்.  ஐந்து கதையாவது படித்திருந்தால் நல்லது.  *** என் எழுத்துக்கு யாரிடமிருந்து எதிர்வினை வருகிறதோ இல்லையோ என் நண்பர் பாலசுப்ரமணியனிடமிருந்து குறைந்த பட்சம் ஐந்து கடிதங்களாவது வந்து விடும்.  பாராட்டும் கடிதங்கள் அல்ல, எதிர்வினைகள்.  பல சமயங்களில் அவர் கொடுக்கும் விவரங்கள் எனக்குப் பெரிதும் உதவி செய்திருக்கின்றன.  கடுமையான … Read more