177. ஓஷோ

அன்புள்ள சாரு, நான் சமீபத்தில் உங்களது சில புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் மூலம் வாங்கினேன். அவற்றில் ஃபேன்ஸி பனியன் மற்றும் பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 1 இரண்டையும் படித்து முடித்து விட்டேன். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. ஃபேன்ஸி பனியன் நாவல் மிகவும் புதுமையாக இருந்தது. நான் இதுவரை பல நாவல்கள் படித்திருந்தாலும் இது வித்தியாசமானதாக தோன்றியது. இது சுயசரிதை போலவும் இருக்கிறது அதே சமயம் புனைவு போலவும் இருக்கிறது. எது எவ்வளவு … Read more

176. பண உறவு

என் நைனா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராக இருந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார்கள்.  ஆறு குழந்தைகள்தான் வாழ்வின் ஒரே பொழுதுபோக்கு.  ஒரே இன்பம்.  பைசா பைசாவாகச் சேர்த்து, உலக மகா கஞ்சனாக வாழ்ந்து சென்னை கௌரிவாக்கம் அருகே ஒரு ரெண்டு கிரௌண்டு நிலம் வாங்கி குடிசை போட்டுக் கொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள்.  என் கடைசித் தம்பிக்கு சுழி சரியாக இல்லாததால் உருப்படவில்லை. அதனால் அந்த நிலத்தையும் வீட்டையும் அவன் பெயரிலேயே எழுதி வைத்து விட்டு இறந்து போனார்கள்.  கூடவே அம்மாவும் … Read more

பூச்சி 175: ஆஞ்சநேயர்

S.Y. Krishnaswamy எழுதிய Thyagaraja: Saint and Singer என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாருக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்கள்.  கிண்டிலில் கிடைத்தாலும் பரவாயில்லை.  அல்லது, ஏதாவது நூலகத்தில் இருக்கிறதா?  இசை தொடரை இன்றும் எழுத நிறைய உத்வேகம் கிடைத்தது.  இசை தொடருக்குக் கிடைத்தது போன்ற உற்சாகமான பாராட்டு இதுவரை என் வாழ்நாளில் பார்த்திராதது.  இன்றும் ஒரு பன்னிரண்டு மணி நேரக் கட்டுரைக்கு வேலை இருந்தது.  அசோகாவில் உட்கார்ந்து விட்டேன்.  மார்ச்  கெடு என்று … Read more

8. இசை பற்றிய சில குறிப்புகள்

இன்னும் ஒரு வாரம் கழித்தே இசைக்கு வருவேன் என்றேன்.  ஆனால் இதை இன்று எழுதாமல் போனால் மனதிலிருந்து போய் விடும் என்பதால் சுருக்கமாக எழுதி விடுகிறேன்.  பக்தி என்ற வார்த்தையை முந்தைய அத்தியாயத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  திருக்குறள் போன்ற ஒரு உலகப் பொதுமறையை உலக இலக்கியத்தில் காண்பது அரிது.  ஈடு இணையில்லாத ஒரு அறநூல் அது.  அறநூல் மட்டும் இல்லை.  காமத்துப் பாலும் இருக்கிறது.  வள்ளுவரின் காலத்தில் எந்த நூலுமே கடவுள் வாழ்த்தோடுதான் … Read more

7. இசை பற்றிய சில குறிப்புகள்

(இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் இசைக்கு வருவேன். இந்தக் கட்டுரை சற்றே நீளமானது. எழுதி முடிக்க பன்னிரண்டு மணி நேரம் ஆயிற்று. படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் ஆவல்.) நேற்று எழுதப்பட்ட இசை கட்டுரையில் எடுத்த எடுப்பில் ஒரு தவறு இருந்தது போலும்.  பாலசுப்ரமணியன் தான் அதை இப்போது சுட்டிக் காட்டினார்.  அரியக்குடி மஹா பெரியவரைச் சந்தித்தது 1981 என்று உள்ளதே, அரியக்குடி 1967இலேயே காலமாகி விட்டாரே என்று கேட்டு, அந்த 1981 என்பது … Read more

6. இசை பற்றிய சில குறிப்புகள்

இப்போது நாம் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஒருமுறை அரியக்குடியைத் தன் இடத்துக்கு வரவழைத்த மஹாப் பெரியவர் அவரிடம் முத்துஸ்வாமி தீட்சிதரின் ஒரு கிருதியை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, பிறகு, அதை ஒவ்வொரு வரியாகப் பாடச் சொல்லி அதற்கான அர்த்தத்தை விளக்கியிருக்கிறார்.  1961 ஜூனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  மஹாப் பெரியவர் தேவகோட்டையில் நீண்ட காலம் முகாமிட்டிருந்தார்.  மௌன விரதத்தில் இருக்கிறார்.  ஜாடையில் கூட எதுவும் தெரிவிக்காத காஷ்ட மௌனம்.  ஒரு வாரம் பத்து … Read more