an open letter to Sanjay Subrahmanyan

இந்த வார குமுதத்தில் நான் எழுதியுள்ள மேற்கண்ட கடிதம் கடும் விவாதங்களுக்கு உட்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திராதவர்களெல்லாம் எனக்கு போன் செய்து பேசினார்கள். கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ள அந்தக் கடிதத்தை என் ப்ளாக் வாசகர்களும் படிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன். பொதுவாக பத்திரிகைகளில் நான் எழுதுவதை என் ப்ளாகில் மறுபிரசுரம் செய்வது என் வழக்கம் இல்லை. எனவே நீங்களே குமுதத்தை ஆன்லைனிலோ, உள்ளூர் நண்பர்கள் கடையிலோ வாங்கிப் படிக்கலாம். படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

188. ராம்ஜிக்கு ஒரு கடிதம்…

ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு, நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி.  இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம்.  அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன்.  விஷயம் இதுதான்.  ரொம்ப சிம்பிள்.  ஆனால் ரொம்பக் கஷ்டம்.  நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன்.  45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன்.  தெய்வத்தால் ஆகாது … Read more