அன்புள்ள சாரு, எப்போதும் எனக்குள்ளே ஒரு கர்வம் இருக்கும் – என் சிந்தனைகள் என் சார்புகள் எல்லாம் என்னாலே என் மூலம் உருவானது, நான் சுயம்பானவன் என நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் சிந்தனைகளின் ஆழத்தில் சென்று பாத்த்தால் அது எல்லாமே உங்களைப் படித்து, நீங்கள் பேசியதைக் கேட்டு உங்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதுவாகவே நான் மாறியிருக்கிறேன் என்பதே நிஜம். என்னை உருவாக்கிய உங்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு. இந்த வீடீயோவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் சாரு, இதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நீங்கள் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். இந்த வீடியோவில் சொல்ல வரும் கருத்துக்கள் கூட நீங்கள் ஏற்கனவே பல முறை கூறியவை தான் சாரு, இறைவன் படைத்ததை மீண்டும் அவருக்கே படைப்பது போல் இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாரு இன்று மாலைக்கான zoom meetigல் கலந்துக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன், link தர முடியுமா? அன்புடன் கார்த்திக் வளனைப் போலவே கார்த்திக் என்னுடைய இன்னொரு பிள்ளை. கார்த்திக், முத்துக்குமார், ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் இல்லையேல் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். என் குடும்பத்தில் ஒருவர் கார்த்திக். நானாக யாருக்கும் லிங்க் அனுப்பாததன் காரணம், நான் அனுப்பி அவர்களால் வர முடியாத சூழல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போகுமே என்றுதான். மேலும், கார்த்திக் எல்லாம் மனோவிடம் … Read more