முன்னோடிகள்: புதுமைப்பித்தன் (1)

அன்புள்ள சாரு, புதுமைப்பித்தன் உரையின் முதல் பாகம் கேட்டேன். படு விறுவிறுப்பான சினிமா போல் இருந்தது. 5 நிமிடம் கேட்கலாம் என்று உட்கார்ந்தேன். முன்றரை மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். ஆனால் கோபி கிருஷ்ணன் உரை தான் இது வரை நான் கேட்ட உரைகளிலேயே உச்சம். நகுலன் உரையில் உங்கள் அறையின் ஒளி, நீங்கள் உங்கள் பூனைகளுடன் பேசுவது என்று அற்புத அனுபவமாக இருந்ததென்றால், கோபி கிருஷ்ணன் உரையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர். … Read more

இசை பற்றிய சில குறிப்புகள்

நாளை காலைக்குள் இசை தொடரின் அடுத்த அத்தியாயத்தைப் பதிவேற்றுவேன். இசை கட்டுரையை ஒரு ஓட்டத்தில் எழுதி விட இயலாது. பல மணி நேரங்கள் இசைக் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். ஏற்கனவே பல முறை கேட்டிருந்தாலும் எழுதுவதற்கு முன் ஒரு முறை கேட்டு விட்டால்தான் எழுத வசதி. எனவேதான் இத்தனை நேரம் ஆகும் என்றேன். அடுத்த கட்டுரை இசை தொடரின் ஆறாவது அத்தியாயம். அந்த ஆறாவது அத்தியாயத்தைப் படித்துத் தொடர இந்த நான்காவது அத்தியாயத்தைப் படித்து விடுவதே நல்லது. … Read more