வித்தியாசமான நாள்

இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். … Read more

என் எழுத்து பற்றிய மிகச் சிறந்த ஆய்வு

இதுவரை என் எழுத்து பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். முதலில் எழுதியவர்கள் ஜமாலன், நாகார்ச்சுனன். பிறகு இந்திரா பார்த்தசாரதி. அ. மார்க்ஸ். அதற்குப் பிறகு சிலர். இவர்கள் அத்தனை பேரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதுண்டு. சென்ற ஆண்டு புத்தக விழாவின்போது எஸ். சண்முகத்துடன் ஜமாலனைப் பார்த்த போது அது ஜமாலன் என்று தெரியாமல் விட்டு விட்டேன். பிறகுதான் சண்முகம் சொன்ன போது அடடா, பேசாமல் போனோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். அதையும் … Read more