40 ஆண்டுகளாகக் கிடைக்காத அடியேனின் புத்தகம்…

1982 என்று நினைக்கிறேன்.  லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற என் புத்தகம் வந்தது.  18 ரூபாய் விலை.  அப்போதெல்லாம் 8 ரூ.தான் விலை வைப்பார்கள்.  10 ரூபாய் என்றாலே அதிக பட்சம்.  நான் என்னுடைய புத்தகத்தையெல்லாம் நானே அச்சிட்டு வெளியிட்டதால் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்ததாலும் லத்தீன் அமெரிக்க சினிமாவை தில்லியில் பல சிரமங்களுக்கு இடையில் பார்த்ததாலும் அவ்வளவு விலை வைத்தேன். இருந்துமே ஆறு மாதத்தில் புத்தகம் தீர்ந்து விட்டது. அ. மார்க்ஸ் அப்போது … Read more

ஜோக்கா? சீரியஸா? : சிறுகதை

நகைச்சுவை உணர்வு என்றால் அது தஞ்சாவூர்தான்.  அந்த மண்ணுக்கு உரிய விசேஷங்களில் அது ஒன்று. Body shame கூட எங்கள் ஊரில் பகடியாகத்தான் கருதப்படும்.  முடிந்தால் நீங்கள் பதிலுக்குப் பண்ணலாம்.  இல்லாவிட்டால் அதை ரசித்து விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.  இந்த பாடி ஷேம் பண்ணுவதில் பெண்கள் ஜித்தர்கள்.  ஜெயிக்கவே முடியாது.  அதிலும் குறிப்பாக பாலியல் சம்பந்தமான பகடிகள்தான் ஏராளம்.  அதுவும் பெண்கள்தான் பண்ணுவார்கள். இருபத்தைந்து வயதில் தஞ்சாவூரிலிருந்து தில்லிக்குப் போனால் அது தஞ்சாவூரை விட … Read more