முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மீண்டும்)

அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன்.  புத்தகம் வெளிவந்த பிறகுதான்.  ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.  இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை.  ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன்.  பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது.  அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள்.  நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் … Read more

பிறழ்வெழுத்து: சாபமும் விமோசனமும்

தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள்.  அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம்.  அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர்.  அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு.  ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை.  அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான்.  ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.  சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது.  தண்டபாணி குளித்து முடித்து விட்டார்.  வெளியே … Read more