இஞ்சி சுக்கு கடுக்காய்

இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற புத்தகத்தைப் பிழை திருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். 2012-2013 காலகட்டத்தில் எழுதியவை. இதை சப்ஜெக்ட் வாரியாகத் தொகுப்பது சாதாரண வேலை இல்லை. ஒரே சப்ஜெக்டாகத் தொகுக்க வேண்டும். தலை வெடித்து விடும். ஸ்ரீராம்தான் தொகுத்தார். அந்தத் தொகுப்பில் இந்தப் பாடல் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு வயலினை விட ஜாஸ் மற்றும் பியானோ இரண்டும் பிடித்தவை. இந்திய வாத்தியங்களில் நாதஸ்வரம், ஷெனாய்.

அழியாத ரேகைகள்: சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள்

சென்ற ஆண்டு என் நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் ராமசேஷனும் பூரிக்குச் சென்றிருந்தனர். ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.  நான் ஆடம்பரமாகத் தங்குவேன், விமானத்தில்தான் செல்வேன், இதெல்லாம் ராகவனுக்குக் கட்டுப்படி ஆகாது என்றார் ராகவன்.  நானே தனியாக விமானத்தில் கிளம்பிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டிருப்பேன்.  ஆனால் எனக்கு அப்போது கடும் வேலை.  அங்கே போனவர் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கினார்.  நண்பரின் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்.  தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம்.  அதில் ஒரு புத்தகம் சுதா … Read more

ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

தீவிர இலக்கியம் என்று சொல்ல முடியாத, அதே சமயம் வெறும் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்ட pulp writing என்றும் எடுத்துக் கொள்ள முடியாத பல்வேறு வகையான எழுத்து வகைகள் ஆங்கிலத்தில் உண்டு.  ஹெரால்ட் ராபின்ஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வகையறாக்களை நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட பொழுதுபோக்கு எழுத்து என்று வகைப்படுத்தலாம்.  ஒவ்வொரு வகை எழுத்துக்கும் சமூகத்தில் தேவை இருக்கிறது.  அவ்வளவுதான் விஷயம்.  சில வளர்ச்சி அடைந்த சமூகங்களில் பொழுதுபோக்கு எழுத்தை 25 சதவிகிதத்தினர் படிப்பார்கள்.  மீதி … Read more